செல்லம்மாள் பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்... 

May 9, 2026 - 19:57
 0  1.1k
செல்லம்மாள் பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்... 

செல்லம்மாள் பள்ளி மாணவிக்கு குவியும் பாராட்டுகள்... 

பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நடைபெற்றது. சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதினார்கள். தேர்வு முடிவு மே 8-ந்தேதி நேற்று வெளியானது 

இந்த பொதுத்தேர்வில் திருச்சி மாவட்டம் 97.50% தேர்ச்சி விகிதத்துடன், மாநில அளவில் சிறந்த தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. திருச்சியில் மாணவ, மாணவிகள் சிறப்பாகச் செயல்பட்டு, உயிரி மற்றும் கணிதப் பாடங்களில் அதிக தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அந்த வகையில், திருச்சி திருவெறும்பூர் செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மதுஸ்ரீ என்ற மாணவி பள்ளி அளவிலும் மாவட்ட அளவிலும் முக்கிய இடத்தை பெற்றார். 

தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணியாற்றும் ரெங்கராஜ்- ரூபாமணி ஆகியோரின் மகள் மதுஸ்ரீ நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு பொதுதேர்வில் வேதியியல் மற்றும் உயிரியலில் பாடங்களில் சதம் அடித்து மொத்தம் 593 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார். 

இந்த மாணவியின் சாதனையை கெளரவிக்கும் விதமாக பள்ளி நிர்வாகம் சார்பில் மாணவி மதுஸ்ரீயை பாராட்டி பரிசு பொருட்களை பள்ளியில் சேர்மன் ராமமூர்த்தி வழங்கி கெளரவித்தார். இதே போல் பள்ளியில் இரண்டாம் இடம் மூன்றாம் இடம் பிடித்த மாணவ மாணவிகளையும் அடித்து அவர்களை பாராட்டி கௌரவித்தனர். இந்த நிகழ்வில் பள்ளி முதல்வர் பகவதியப்பன் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த சாதனை மாணவி மதுஸ்ரீ தெரிவிக்கையில்; தான் மருத்துவ துறையில் இதே போன்று சாதனை புரிந்து மருத்துவராக தேசத்திற்காக சேவையாற்றுவேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

 

What's Your Reaction?

Like Like 20
Dislike Dislike 0
Love Love 5
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 6