இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட ராவுத்தான் மேடு சமுதாய கூடத்தில் நடந்த உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழக முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது.
மேலும், இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 18 மற்றும் 19 வது வார்டு ராவத்தான்மேடு, சக்தி நகர், திருவள்ளுவர் நகர், பாரதியார் நகர், பகுதி மக்கள் என சுமார் 2000-ம் பேர் அப்பகுதியில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ராவத்தான்மேடு பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் உங்களுடன்
ஸ்டாலின் திட்ட முகாம் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு நகராட்சி தலைவர் காயம்பூ தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் பட்டுசாமி, திருவெறும்பூர் தாசில்தார் தனலட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முகாமில் கலந்து கொண்டு மனு அளித்து உடனடி தீர்வு காணப்பட்டவர்களுக்கு ஆணைகளை வழங்கினார்.
வருவாய்த்துறை மூலம் துவாக்குடி நகராட்சியை சேர்ந்த அழகம்மாள், ஸ்ரீரங்கம் அம்மாள் மற்றும் இன்னாசி அன்னம்மாள், சுவாமிநாதன், குணசேகர், ஜெகநாதன் ஆகியோருக்கு இலவச நத்தம் பட்டாவினை வழங்கினார்.
மேலும், முகாமில் கலந்து கொண்ட மகளிர் உரிமை சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை மூலம் தாய்மார்கள் வழங்கப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறதா என்பதையும் கேட்டறிந்ததுடன், அனைத்து துறைகளையும் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து
பெறப்படும் மனுக்கள் குறித்தும் அதற்கு தீர்வு காண்பது குறித்தும் கேட்டறிந்தார்.
முகாமில் அரசு அதிகாரிகளும், பொதுமக்களும், அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து திரளாக கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0