வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தார் வழிபாடு; லட்சக்கணக்கானோர் மாட்டு வண்டியுடன் வந்து  நேர்த்திக் கடன்  

Apr 21, 2026 - 23:57
 0  42
வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தார் வழிபாடு; லட்சக்கணக்கானோர் மாட்டு வண்டியுடன் வந்து  நேர்த்திக் கடன்  

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தார் வழிபாடு; லட்சக்கணக்கானோர் மாட்டு வண்டியுடன் வந்து  நேர்த்திக் கடன்  

வைத்தீஸ்வரன்கோயிலில் நகரத்தார் குலதெய்வ வழிபாடு இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில், லட்சக்கணக்கான மக்கள் பாதயாத்திரையாகவும், சொகுசு கூண்டு மாட்டு வண்டிகள் உடன் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தினர்.

 இதனை முன்னிட்டு மயிலாடுதுறை காவல்துறையினர் வைத்தீஸ்வரன் கோவில் செல்லும் சாலைகளில் ஆங்காங்கே போலீஸ் விழிப்புணர்வு வாசகங்கள் மற்றும் குடிநீர் ஏற்பாடு செய்திருந்தனர். இது குறித்த விபரம் வருமாறு ;

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தளத்தில் நவகிரகங்களில் செவ்வாய், செல்வமுத்துக்குமார சுவாமி, நோய் தீர்க்கும் தன்வந்திரி ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். 

 வைத்தீஸ்வரன்கோயிலில் சுவாமி அம்பாளை தரிசித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 முக்கிய திருவிழாவான நகரத்தார் வழிபாடு இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்க சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை தொடங்கிய காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் நேற்று மாலை வைத்தீஸ்வரன் கோவில் எல்லையை அடைந்தனர். அவர்கள் இன்று காலை கோவிலை வலம் வந்து தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவி வைத்து பூஜித்து குச்சியுடன் பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். 

பின்னர் சுவாமி அம்பாளை வழிபட்ட நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து சென்றனர். பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. வைத்தீஸ்வரன் கோயில் நகராட்சி சார்பாகவும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்திருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதை முன்னிட்டு வைத்தீஸ்வரன் கோயில் தேரோடும் வீதிகளில் புதிதாக முளைத்த தெருக்கடைகளால் ஆங்காங்கே போக்குவரத்து ஸ்தம்பித்தது.

 

முன்னதாக காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து இந்த முறை மாட்டு வண்டியில் வந்த பக்தர்கள் திரும்பி செல்வதற்கும் பாதயாத்திரை ஆக வரும்போது ஓய்வு எடுப்பதற்கும் தத்தம் மாட்டு வண்டிகளில் பேட்டரியால் இயங்கக்கூடிய விசிறி உள்ளிட்ட சொகுசு வசதிகளுடன் வந்தது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0