ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை; திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

Apr 16, 2026 - 12:11
 0  73
ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை;  திமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

ரூ.8000 கூப்பன் விவகாரம்; இளம் பெண் தற்கொலை: திமுக பிரமுகர்கள் 6 பேர் கைது 

மண்​ணச்​சநல்​லூர் தொகு​தி​யில் ரூ.8000 கூப்பன் விநியோகித்த நிலையில் தமக்கு தராததை கண்​டித்த இளம் பெண்ணை திமுக​வினர் ஆபாச​மாக பேசியதால் இளம்பெண் மனஉளைச்​சலில் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, 6 பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இது குறித்த விபரம் வருமாறு ;

திருச்சி மாவட்​டம் மண்​ணச்​ச நல்​லூர் தொகு​தி​யில் தாளக்​குடி ஊராட்​சிக்​குட்​பட்ட வாழக்​கட்டை பகு​தி​யில் திமுக வேட்​பாளர் கதிர​வனுக்கு ஆதர​வாக அப்​பகு​தி​யைச் சேர்ந்த திமுக​வினர் சிலர், வாக்​காளர்​களுக்கு நேற்று முன்​தினம் ரூ.8000 மாதிரி கூப்பன் வழங்கியதாக கூறப்படுகிறது.

அப்​போது, அந்த பகு​தி​யைச் சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் பிர​சாந்த் மனைவி சிந்​துஜா என்​பவர் தனக்​கும் பரிசுப் பொருள் கொடுக்​கும்​படி கேட்​டுள்​ளார்.

இதில் வாக்​கு​வாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தகராறு முற்றி அந்​தப் இளம் பெண்ணை பரிசுப் பொருட்​கள் விநி​யோகித்த திமுக​வினர் சிலர் ஆபாச​மாக திட்​டி, தாக்​கிய​தாகக்கூறப்​படு​கிறது.

இதில் மனமுடைந்த அப்​பெண் நடந்த விவரங்​களை அன்று இரவு கணவர் பிர​சாந்​திடம் கூறி உள்​ளார். தொடர்ந்து மன உளைச்​சலில் இருந்த சிந்​துஜா, வீட்டை உள்​பக்​க​மாக தாழிட்​டுக் கொண்டு சேலை​யால் தூக்​குப் போட்​டுள்​ளார்.

இதனால் அதிர்ச்​சி​யடைந்த கணவர், வீட்​டின்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்​று, மனை​வியை அக்​கம் பக்​கத்​தினர் உதவி​யுடன் மீட்டு தனி​யார் மருத்​து​வமனைக்கு ஆம்​புலன்ஸ் மூலம் அழைத்​துச் சென்​றார். ஆனால் அவர் செல்​லும் வழி​யிலேயே இறந்​தார்.

இதனிடையே, அவரை தற்​கொலைக்கு தூண்​டிய​வர்​கள் மீது நடவடிக்கை எடுக்​கக்கோரி சிந்​துஜா​வின் உறவினர்​கள், திருச்​சி-சேலம் சாலை​யில் உத்​தமர் ​கோ​வில் மேம்​பாலத்​தில் நேற்று சாலை மறியலில் ஈடு​பட்​டனர்.

தகவலறிந்து வந்த கொள்​ளிடம் போலீ​ஸார், அவர்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்​தி, உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என தெரி​வித்​ததைத் தொடர்ந்து மறியலை கைவிட்​டனர். பின்​னர் அவர்​கள் கொள்​ளிடம் காவல் நிலை​யத்தை முற்​றுகை​யிட்​டனர்.

இதுதொடர்​பாக சிந்​துஜா​வின் தாயார் இளை​ய​ராணி கொடுத்த புகாரின்​ அடிப்படையில், தற்​கொலைக்குதூண்​டியது, பெண் வன்கொடுமை தடுப்​புச் சட்​டம் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​து, ராஜா, திமுக கிளைச் செய​லா​ளர் ராஜேந்​திரன், ரவிக்​கு​மார், ராஜா மனைவி புஷ்பம், ராஜேந்​திரன் மனைவி ராஜேஸ்​வரி, ராஜ்கு​மாரின் தாய் அங்​குமணி ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.  

மேலும், தலைமறைவாக உள்ள திமுக நிர்​வாகிகள் சுரேஷ்கு​மார், ராஜ்கு​மார், ரவி மனைவி கார்த்​திகா ஆகியோரை போலீஸார் தேடி வரு​கின்​றனர். 

 அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்கு இடையே திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பணியாற்றிய திமுக நிர்வாகிகளால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த தற்கொலை சம்பவத்திற்கு தவெக, பாஜக, அதிமுக என பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 1
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0