திமுக அறிவித்த ரூ.8000-ம் கூப்பன் விவகாரம் : மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலை; சாலை மறியலால் பரபரப்பு 

Apr 15, 2026 - 14:32
 0  126
திமுக அறிவித்த ரூ.8000-ம் கூப்பன் விவகாரம் : மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலை; சாலை மறியலால் பரபரப்பு 

திமுக அறிவித்த ரூ.8000-ம் கூப்பன் விவகாரம் : மண்ணச்சநல்லூரில் இளம்பெண் தற்கொலை; சாலை மறியலால் பரபரப்பு 

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பல்வேறு கவர்ச்சிகர விளம்பரங்கள் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் எட்டாயிரம் கூப்பன் என்ற கவர்ச்சிகர அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என தேர்தல் ஆணையம் எவ்வளவோ சொல்லியும் அரசியல் கட்சிகளும் நிறுத்தவில்லை, பொதுமக்களும் திருந்தவில்லை.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 8 ஆயிரம் மதிப்புள்ள டோக்கன் கொடுக்கப்படும். அதில் ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை வாங்கிக் கொள்ளலாம் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது. 

ஆனால், தேர்தல் நடக்கும் முன்பே தமிழகத்தின் பல தொகுதிகளிலும் திமுகவினர் மாதிரி டோக்கனை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு சென்று கொடுத்து வாக்கு கேட்பதாகவும், திமுக சார்பில் வழங்கப்படுவதாகக் கூறப்படும் ரூ.8,000 மதிப்பிலான தேர்தல் கூப்பன்கள் விநியோகத்தில் பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார் எழுந்தது. 

இந்நிலையில்தான் திருச்சி மண்ணச்சநல்லூரில் சிந்துஜா என்கிற தலித் பெண் தனக்கு ரூ.8000 கூப்பன் வழங்கவில்லை என வாக்குவாதம் செய்தபோது திமுகவினர் அவரை ஆபாசமாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவமானமடைந்த சிந்துஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

.இதையடுத்து, ஆபாசமாக பேசித் தாக்கிய திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி லால்குடி சாலையில் சிந்துஜாவின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும், சிந்துஜாவின் மரணத்திற்கு நேரடியாகக் காரணமான திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி முழக்கமிட்டனர். சாலை மறியல் காரணமாக அந்தப் பகுதியில் பல மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளையும் பணத்தையும் முன்னிறுத்திச் செய்யப்படும் அரசியல், எத்தகைய உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாக அமைந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 2
Wow Wow 0