நாகை மாவட்டத்தை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக 2021 ல் திமுக அறிவிப்பு-பி.ஆர். பாண்டியன் கண்டனம்
நாகை மாவட்டத்தை பெட்ரோலிய இரசாயன மண்டலமாக 2021 ல் திமுக அறிவிப்பு-பி.ஆர். பாண்டியன் கண்டனம்
தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசரக்கூட்டம் நாகப்பட்டினத்தில் மாவட்டத் தலைவர் புலியூர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
நாகை மாவட்டத்தில் 2024 ல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பேரிடர் மேலாண்மை நிதி மூலம் இழப்பீடு இதுவரையில் வழங்கப்படவில்லை.
கலைஞர் பிறந்த திருக்குவளையில் விவசாயிகள் தற்கொலைகள் தொடர்கிறது.
நெல் உரிய காலத்தில் கொள்முதல் செய்யப்படவில்லை. 2021 தேர்தல் அறிக்கையில் ஒன்றியங்கள் தோறும் மூடப்பட்ட கிடங்குகள் அமைத்து நெல் பாதுகாக்கப்படும் என்று அறிவிப்பு செய்த திமுக கிடங்குகள் அமைக்கப்படாமல் வீணடிக்கப்படுகிறது.
கூட்டுறவு வங்கிகளில் கடன் தர மத்திய அரசு அனுமதிக்கவில்லை என்று கூறுவது உண்மைக்கு புறம்பானது. நெல்லுக்கு ஊக்கத்தொகை தரக்கூடாது என்று மத்திய அரசு உத்தரவு என சொல்லுவதும் உண்மைக்கு மாறானது.
ரிசர்வ் வங்கி செலவின தொகை கட்டுப்பாட்டு செயலாளர் எழுதும் கடிதம் மத்திய அரசின் கொள்கை முடிவாக முதல்வர் கூறுவது உண்மைக்கு புறம்பானது.
கடன் தள்ளுபடி ஊக்க நிதி உட்பட மாநில அரசு தனது சொந்த நிதியில் இருந்து ஈடு செய்கிறது. இதனை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது மாறாக தேர்தல் முடிந்த பிறகு ஊக்கத்தொகை திரும்ப பெறுவதோடு, கடன் கொடுப்பதையும் ரத்து செய்யும் உள் நோக்கம் கொண்டது.
2018 முதல் சத்தீஸ்கர் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நெல் குவிண்டால் 1க்கு ரூ.2500 துவங்கி இன்று ரூ 3300 வரையிலும் கொடுக்கப்படுகிறது. எனவே, மாநில அரசு நிதி திட்டங்களை மத்திய அரசு கட்டுப்படுத்த முடியாது.
நாகப்பட்டினம் மாவட்டத்தை 2021 ல் திமுக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பாதுகாக்கப்பட்ட பெட்ரோலிய இரசாயன மண்டலமாக அறிவித்தது. அதற்கு எதிராக போராட்டம் அறிவித்தோம். முதலமைச்சரை தலையிட்டு அரசாணையை திரும்ப பெற்றார். இது திமுக அரசின் விவசாய விரோத கொள்கைகளை துவக்கத்திலேயே வெளிப்படுத்தியது.
தொடர்ந்து மணலி எண்ணெய் சுத்திகரிப்பாளை கிளை நிறுவனம் சுமார் 26 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நாகையில் விரிவாக்கம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. உரிய காலத்தில் விவசாயிகள் ஒப்புதலோடு நிலங்களை பெற்று அந்த நிறுவனத்திற்கு வழங்காததால் வேறு மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதுஇதனால் நாகை மாவட்டம் பொழிவிழந்துள்ளது.இந்நிலைக்கு திமுக அரசு பொறுப்பு ஏற்க வேண்டும்.
இவ்வாறு சுய லாபத்தோடு செயல்படுகிற திமுக அரசு விவசாயிகளுக்கான காப்பீடு திட்டத்தை கூட பெற்றுத் தர முன்வருவதில்லை. 2017 முதல் 21 வரையிலும் அதிமுக ஆட்சி காலத்தில் ரூ.13000 ம் கோடியை விவசாயிகளுக்கு இழப்பீடாக காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கியுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் 2026 வரை வெறும்௹ 3000 கோடி மட்டுமே இழப்பீடாக பெற்றுக் கொடுத்துள்ளனர்தேசிய வேளாண் காப்பீட்டு நிறுவனம் மூலம் காப்பீடு செய்வதற்கு திமுக அரசு அனுமதி மறுக்கிறது.தனியார் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதிக்க விரும்புகிறது.
மாவட்ட ஆட்சியர் விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டங்கள் நாகையில் முறைப்படி நடத்தப்படுவதில்லை.
விவசாயிகளை அவமதிக்கிற வகையிலும், கார்ப்பரேட்டுக்கு ஆதரவான வகையிலும் தொடர்ந்து செயல்படுகிறது.
நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 மூலம் விவசாயின் ஒப்புதில்லாமல் நிலங்களை அபகரித்து வருகிறது. கோவில் அறக்கட்டளைகள் ஆதீனங்களுக்கு சொந்தமான நிலங்களை தமிழ்நாடு முழுமையிலும் அபகரிக்க முயற்சிக்கிறது.
கோயில், அறக்கட்டளை சொத்துக்கள் என்கிற பெயரில் குத்தகை விவசாயிகள் நிலங்களை விற்பனை செய்ய முயற்சிக்கிறது. தமிழக அரசு குத்தகை வார பாதுகாப்பு சட்டத்தின் அடிப்படையில் கோயிலுக்கு உள்ள அதிகாரம் விவசாயிகளுக்கும் நிலத்தில் உள்ளதை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது.
விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை திட்டங்களாக நிறைவேற்ற திமுக அரசு ஈடுபடுவதால் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பது என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடப்படுகிறது என்றார்.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேதை கருணைநாதன், நாகை ஒன்றிய தலைவர் வேலாயுதம், திருமகள் ஒன்றிய செயலாளர் பரமசிவம், தலைவர் மகேஷ் குமார் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
1