தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம்; வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்- குமரியில் விஜய் வாக்குறுதி 

Apr 12, 2026 - 18:49
 0  27
தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம்; வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்- குமரியில் விஜய் வாக்குறுதி 

தவெக ஆட்சியில் ஏஐ அமைச்சகம்; வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்- குமரியில் விஜய் வாக்குறுதி 

தமிழக சட்டமன்றத் தேர்தல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் மேற்கொண்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் 6 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து மகாதானபுரம் பகுதியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்;

என் நெஞ்சில் குடியிருக்கும் கன்னியாகுமரி, காரைக்குடி மக்களுக்கு வணக்கம். அன்று காரைக்குடியில் என்னால் பேச முடியாமல் போனது. இப்போது தவெக ஆட்சியின் சில திட்டங்களை அறிவிக்கிறேன். தவெக அரசு அமைந்தால், நம் ஆட்சியில் லஞ்சம் இல்லாமல் ஒவ்வொருவருக்கும் நலத்திட்டம் போய் சேரும். அதற்காக ஆதார் அட்டை போல தமிழகத்தில் ஒரு அடையாள அட்டை உருவாக்கப்படும். 

தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைந்த 6 மாதத்திற்குள் "வெற்றி தமிழ்நாடு சூப்பர் ஆப்" (Vetri Tamil Nadu Super App) என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் . அரசின் நலத்திட்டங்களைப் பெற மக்கள் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை; அரசாங்கமே மக்களின் வீட்டு வாசலுக்கு வந்து திட்டங்களைச் சேர்க்கும். ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து அடையாள ஆவணங்களும் இந்தச் செயலி மூலமே மொபைலில் கிடைக்கும். ஆவணங்களுக்காக அலைக்கழிக்கப்படுவதோ அல்லது லஞ்சம் கொடுப்பதோ இனி இருக்காது.

செயற்கை நுண்ணறிவு (AI) தலைநகராக தமிழ்நாடு

தமிழ்நாட்டை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு (AI) தலைநகராக மாற்றுவதே எனது இலக்கு. 

தமிழ்நாட்டில் முதல்முறையாக "AI CITY" (செயற்கை நுண்ணறிவு நகரம்) அமைக்கப்படும். சேலம், திருச்சி போன்ற நகரங்களில் செயற்கை நுண்ணறிவு புத்தாக்க மையங்கள் உருவாக்கப்படும். பொறியியல் திறமையையும், பொருளாதாரத்தையும் இணைத்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருக்கப்படும்.

நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் லஞ்ச ஒழிப்பு

லஞ்சம் இல்லாமல் அரசின் திட்டங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய தனி அடையாள அட்டை வழங்கப்படும். தமிழ்நாடு சேவை உரிமைச் சட்டம்: அரசுச் சேவைகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மக்களுக்குச் சேவை செய்ய முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. தற்போதைய ஆட்சி கடன் சுமையை மக்கள் தலையில் சுமத்துவதாக அவர் விமர்சித்தார்.

மக்களே ஆட்சியின் பங்காளர்கள்

மக்களை வெறும் வாக்காளர்களாகப் பார்க்காமல், அவர்களை ஆட்சியின் பங்காளர்களாக மாற்ற புதிய இணையதளம் உருவாக்கப்படும். மக்கள் மனுக்களுக்கு முக்கியத்துவம்: 10,000 பேர் கையெழுத்திட்டு அளிக்கும் மனுக்களுக்குக் கட்டாயம் பதில் அளிக்கப்படும். ஒரு மனுவில் 10 லட்சம் பேர் கையெழுத்திட்டால், அது குறித்து சட்டப்பேரவையில் விவாதிக்கப்படும். சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஒரு நாள் முழுவதும் மக்களின் கோரிக்கை மனுக்களுக்காக மட்டுமே ஒதுக்கப்படும்.

தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கன்னியாகுமரி வந்தடைந்தார். மாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரை அவருக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது. திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், இது கதை அல்ல, அறிவியல் பூர்வமாகச் சாத்தியமான திட்டங்களையே நான் சொல்கிறேன் என்று உறுதியளித்தார்.

 

முன்னதாக கன்னியாகுமரியில் பிரச்சாரம் மேற்கொள்ள தூத்துக்குடியில் இருந்து சென்றவர் கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் சைக்கிள் ஓட்டி நகர்வலம் வந்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0