சாத்தான்குளம் ஜெயராஜ்–பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை- நீதிபதி முத்துக்குமரன்
சாத்தான்குளம் ஜெயராஜ்–பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேருக்கும் இரட்டை
மரண தண்டனை
மதுரை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சாத்தான்குளம் ஜெயராஜ்–பென்னிக்ஸ் கொலை வழக்கில் முக்கிய தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என கடந்த மாதம் 23-ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் மார்ச் 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதால் விசாரணை ஏப்ரல் 2-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த வழக்கில், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. இதையடுத்து நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது.
தீர்ப்பில், “தந்தை, மகனை ஒருவர் முன்னிலையில் ஒருவர் நிர்வாணப்படுத்தி தாக்கிய சம்பவம் மனதை உலுக்கும் வகையில் உள்ளது. காவல்துறையினருக்கு ஆயுள் தண்டனை அச்சத்தை ஏற்படுத்தாது. மரண தண்டனை விதிப்பதே பொருத்தமானது” என நீதிபதி குறிப்பிட்டார்.
மேலும், “அதிகாரம் உள்ள இடத்தில் பொறுப்பும் இருக்க வேண்டும். குறைந்த தண்டனை வழங்கப்பட்டால் சட்டத்தை அலட்சியப்படுத்தும் நிலை உருவாகும்” என்றும் அவர் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், முதல் குற்றவாளியான ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனை மற்றும் ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 8 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, அபராதத் தொகையில் மட்டும் வேறுபாடு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0