திருச்சி அதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

Apr 6, 2026 - 09:36
Apr 6, 2026 - 09:53
 0  141
திருச்சி அதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

திருச்சி அதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு 

திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறு​வனத்​தில் வரு​மான வரித்துறை​யினர் சோதனை நடத்​தினர்.

திருச்​சி-மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் மணி​கண்​டம் அருகே திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன் கல்வி நிறு​வனத்​தில் வரு​மானவரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

 அதிமுக வேட்பாளர் நடத்தி வரும் கல்வி நிறு​வனத்​துக்கு நேற்று மாலை 2 கார்​களில் வந்த அதி​காரி​கள் விடிய விடிய சோதனை நடத்தினர்.

 திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் ராஜசேகரன் தனது பிரச்சார பயணத்தில் இருக்கும் பொழுது இந்த அதிரடி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் கல்லூரியில் பணியாற்றும் பலரது வங்கிக் கணக்கில் குறிப்பிட்ட தொகைக்கு மேல் வரவு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதாகவும்  பேசப்படுகிறது.

  தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு ஏதும் பணம் பதுக்கல் அங்கு இருக்கலாம் என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்தியதாக கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0