அதிமுக ஊழல் கட்சி என சொல்லி ஜெயலலிதாவை சிறையில் அடைத்த பாஜக இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி- சீமான்

Apr 5, 2026 - 09:54
 0  15
அதிமுக ஊழல் கட்சி என சொல்லி ஜெயலலிதாவை சிறையில் அடைத்த பாஜக  இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி- சீமான்

அதிமுக ஊழல் கட்சி என சொல்லி ஜெயலலிதாவை சிறையில் அடைத்த பாஜக இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி- சீமான்

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;

ஸ்டாலின் பழனிசாமி போன்றவர்களிடம் கேட்பது போல் என்னிடமும் எப்படி பிரச்சாரம் போய்க்கொண்டிருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்தியாவுக்கு 196 லட்சம் கோடி கடன் உள்ளது இதைப் பற்றி யாராவது சொன்னார்களா? தமிழ்நாட்டுக்கான கடன் இருப்பதைப் பற்றி நாங்கள் கேள்வி கேட்கிறோம், நீங்கள் கேள்வி கேட்க என்ன தகுதி வைத்திருக்கிறீர்கள், நீங்கள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் கடன் இருக்கத்தானே செய்கிறது. இந்தியாவின் கடன் மட்டுமே தனித்தனியாக மாநில நிர்வாகங்களில் கடனை பார்த்தால் நான் ஒரு லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கும். திடீரென தமிழகத்தில் லஞ்சம் ஊழல் கடன் என்று எப்படி சொல்ல முடிகிறது. 

அதிமுக ஊழல் கட்சி என்று சொல்லிவிட்டு அதன் தலைவியை சிறையில் அடைத்த பாரதிய ஜனதா இப்போது அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

தேர்தல் வரும்போது எதையாவது பேச வேண்டும் என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்திற்கு பத்தரை லட்சம் கோடி கடன் இருப்பது பியூஸ் கோயலுக்கு இன்று தான் தெரியுமா? 

பத்தரை லட்சம் கோடி கடனை வாங்கி இந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு இலவசத்தை தவிர என்ன செய்துள்ளார்கள் என்று ஊடகங்கள் தான் கேள்வி கேட்க வேண்டும். இலவசம் என்பது திட்டமாகாது நட்டம் தான். 

ஒரு வழக்கு கூட இல்லாத விஜய் எந்த வலியை விஜய் குறிப்பிடுகிறார். நேற்றுவரை 261 வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது

நான் ஏறாத நீதிமன்ற படிக்கட்டுகள் கிடையாது. நான் இருக்காத சிறை இல்லை, வலி என்றால் எந்த வலி என்று நாட்டுக்கும் மக்களுக்குமான வலியில் எந்த வலியை தாங்கினீர்கள். அவர் நடித்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது அவருக்கான தனிப்பட்ட வலி. என்னுடைய பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக் கொண்டு எந்த நாட்டுக்கும் செல்ல விடவில்லை. தேர்தல் களத்தில் எடுத்து வைக்கும் கருத்தை கூட நேர்மையாக ஊடகங்களில் வெளியிட விடுவதில்லை, என் மக்கள் பிரச்சினை எனக்கான பிரச்சினை என்று நினைத்ததால் தான் நான் தலைவனாக இங்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய முடியும். என் வலியை மக்களிடம் சொல்வதற்காக அல்ல, மக்களுக்கான வலியை சுமந்து அதற்கு தீர்வு காண வருபவன் தான் தலைவன். நாட்டில் உள்ள பிரச்சனைகளில் மக்கள் பிரச்சனைகளில் எந்த வலியை தாங்கி இருக்கிறார் என்று அவரால் சொல்ல முடியுமா?

நான்கரை லட்சம் வாக்கு வாங்கிய என்னை 36 லட்சம் வாக்கு வாங்க வைத்து தனித்து அங்கீகாரம் பெற்ற கட்சியாக உயர்த்தி இருப்பது மக்களிடம் வந்த மாற்றம் தானே!

இன்னும் 15 நாட்களில் மாற்றத்திற்கான எண்ணம் மக்களிடம் இருக்கிறதா என்று தெரிந்துவிடும்.

மக்களை பதட்டமாக வைத்துக் கொண்டால்தான் ஆட்சியாளர்கள் செய்யும் தவறுகளை மக்கள் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று ஹிட்லர் சொல்லி இருக்கிறார். நாய்க்கு எலும்பு துண்டு போட்டு கவ்வி கொண்டு வர வைப்பது போல் எதையாவது புதிது புதிதாக ஒன்றை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0