முல்லைப் பெரியாறு,காவிரி பெற்ற உரிமைகளை பறிகொடுக்கும் திமுக - தேர்தல் களத்தில் திமுகவை விவசாயிகள் புறக்கணிப்பார்கள்-பி.ஆர்.பாண்டியன்
முல்லைப் பெரியாறு,காவிரி பெற்ற உரிமைகளை பறிகொடுக்கும் திமுக - தேர்தல் களத்தில் திமுகவை விவசாயிகள் புறக்கணிப்பார்கள்-பி.ஆர்.பாண்டியன்
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக நெல் குண்டால் ஒன்றுக்கு ரூபாய் 2500, கரும்பு தன் ஒன்றுக்கு 4000- ம் 2021 முதல் வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்கள், நிறைவேற்றாமல் ஏமாற்றி விட்டார்கள். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்ற விவசாய கடனை ரத்து செய்வோம் என்று சொல்லி விட்டு மறுத்துவிட்டார்கள்.
தற்போது 2026 தேர்தல் அறிக்கையில், விவசாயிகள் கடன் ரத்து குறித்து அறிவிப்பு வெளியிடாமல் விவசாயிகளையே அவமதித்து விட்டார்கள். இதனால் திமுக தேர்தல் அறிக்கையை விவசாயிகள் நம்பவில்லை. முல்லை பெரியாரில் அஇஅதிமுக ஆட்சிக்காலம் வரையிலும் 142 அடி நிரம்பிய பிறகு தான் பாசனத்திற்கும் உபரி நீரும் திறக்கப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 136 அடியிலேயே தண்ணீரை திறக்க கேரளாவிற்கு ஆதரவளித்தது. வைகை அனைத்து தூர்வாரப்படவில்லை. திமுக ஐந்தாண்டு கால ஆட்சியில் கர்நாடக முதலமைச்சர் மேகதாட்டு அணை கட்டபடும் என வாரம் ஒரு முறை அறிவிப்பு செய்து வருகிறார். ஆனால் தமிழக முதலமைச்சர் அதற்கு மறுப்பு தெரிவிக்க முன்வர வில்லை. இதன் மூலம் பெற்ற உரிமைகளை திமுக அரசு பறி கொடுத்துவிட்டது.
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என வாக்குறுதி கொடுத்தனர். அதனையும் செயல்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. மாறாக விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் பல்கலைக்கழக வேளாண் ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமான 1000 ஏக்கர் விளை நிலங்களை சிப்காட்டுக்கு அபகரிப்பதற்கு திமுக அரசு முயற்சி எடுத்தது. இதனை விவசாயிகள் போராடி தடுத்து நிறுத்தி உள்ளோம்.
தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023 மூலம் ஒட்டுமொத்த தமிழகத்திலும் விளைநிலங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு அபகரிப்பதோடு, ஆறுகள் குளங்கள் ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க முயற்சித்து வருகிறார்கள். இதை தட்டி கேட்கும் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்துக் கொடுமை படுத்துகிறார்கள். ஒட்டு மொத்தமாக திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமாக, கடந்த ஐந்தாண்டு காலமாக கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழகம் முழுமையிலும் சிப்காட் என்கிற பெயரில் விளை நிலங்கள் சூறையாடப்படுகிறது.
காவிரி டெல்டாவில் பேரழிவு திட்டங்களை செயல்படுத்துவதற்கு கார்ப்பரேட் மோகம் கொண்ட அமைச்சர்கள் தீவிரமாக செயலாற்றி வருகிறார்கள். மீத்தேன், ஹைட்ரோ கார்பன் நிலக்கரி போன்ற கனிம வளங்கள் எடுப்பதை தடுக்க இயலாது என பேசி வருகிறார்கள்.
மதுரை, திண்டுக்கல் இணைக்க 58ஆம் கால்வாய் வேறுபட்ட பாலத்திற்கு கீழே கனிமகளுக்கு அனுமதி கொடுத்தார்கள். விவசாயிகள் போராடி தடுத்து வைத்திருக்கிறோம், நிரந்தரமாக தடுப்பதற்கு தமிழக அரசு முன்வரவில்லை. இதனால் 58 கால்வாய் உயர்மட்ட பாலத்திற்கு
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
பன்னாட்டு முதலாளிகள் விவசாய நிலங்களை கைப்பற்றி தொழிற்சாலைகள் அமைக்கிறார்கள். அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சங்கம் அமைக்க அனுமதி கிடையாது.
தனது உரிமைக்காக போராடிய சாம்சங் தொழிற்சாலையில் 27 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இன்று வரையிலும் அவர்கள் பணியமர்த்தப்படவில்லை. மாறாக நீதி கேட்ட அரசியல் கட்சிகள் அவமானப் படுத்தப்பட்டார்கள்
எட்டு மணி நேரம் வேளை, எட்டு மணி நேரம் ஓய்வு எட்டு மணி நேரம் உறக்கம் என்பது உலகளாவிய ஒப்பந்தமாகும். அதனை மாற்றி 12 மணி நேரம் வேலை என்கிற சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் முன்மொழிந்தனர். எனவே, இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு பார்க்கிறபோது 2011 இல் கலைஞர் ஆட்சி தோல்விக்கு ஆற்காடு வீராசாமி பொறுப்பேற்றார். 2026 ஸ்டாலின் ஆட்சி தோல்விக்கு டிஆர்பி ராஜா பொறுப்பேற்க வேண்டுமென
விவசாயிகளும் தொழிலாளர்களும் கூறி வருகிறார்கள்.
சென்னையை மட்டுமே தமிழ்நாடு என திமுக அரசு நினைத்து செயல்பட்டு வருகிறது. மதுரை, நெல்லை, கோவை, சேலம் போன்ற நகரங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
சென்னைக்கு வடக்கே பரந்தூர் விமான நிலையம் அமைக்க முயற்சி எடுப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஆந்திராவிற்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் விளைநிலங்கள் சூறையாடப்படுகிறது. கிராமம் கிராமமாக மக்களை அகதிகளாக வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தமிழகம் முழுமையிலும் ஒட்டு மொத்த விவசாயிகள் தொழிலாளர்கள் பொதுமக்கள் திமுகவிற்கு எதிராக வாக்களிப்பது என முடிவெடுத்து இருக்கிறார்கள் என்றார்.
இந்த சந்திப்பின்போது மாநில இளைஞரணி செயலாளர் மேலூர் அருண், முல்லைப் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் எல்.ஆதிமூலம்
உயர் மட்டக்குழு உறுப்பினர் அழகு சேர்வை, மதுரை மாவட்ட செயலாளர் உசிலம்பட்டி மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் மாரிச்சாமி, செல்லம், வெங்கடேஷ், குணசேகரன் உள்ளிட்ட ஏராளமான பங்கேற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0