வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்- முன்னாள் எம்பி ப.குமார்
வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்- முன்னாள் எம்பி ப.குமார்
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் திருவரம்பூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் போட்டியிடுகிறார்.
இதனை முன்னிட்டு பனையகுறிச்சி, சர்க்கார் பாளையம், குவளக்குடி, கீழக்களமலை, மேல களமலை, ஒட்டக்குடி, புத்தாபுரம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று துண்டு பிரசுரங்களை விநியோகித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் ப.குமார் பேசியதாவது;-முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடந்த தேர்தலில் 505 வாக்குறுதிகளை வழங்கினார் அதில் 345 வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, இதனை பல மேடைகளில் நமது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரனும் எடுத்து பேசி இருக்கிறார்கள். மேலும் 165 வாக்குறுதிகளை பகுதியாக தான் நிறைவேற்றி இருக்கிறார்கள். அதே போன்று தன்னால் நிறைவேற்ற முடியாத மத்திய அரசு திட்டங்களை வாக்குறுதிகளாக அளித்தார். நீட் தேர்வை ரத்து செய்வேன், என்றார், அதை ரத்து செய்யவில்லை. ஏனென்றால் அதற்கான அதிகாரம் அவரிடம் இல்லை. ஆனால் நீட் தேர்வை மறு பரிசீலனை செய்யும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ளது. எடப்பாடியார் முதலமைச்சராக இருந்திருந்தால் அதனை நிறைவேற்றி இருப்பார்.
அனைத்து இல்லத்தரசிகளுக்கும் மகளிர் மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 28 மாதம் கழித்து நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியதால் 28 மாதம் கழித்து அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார்கள். அதுவும் தகுதியான நபர்கள் என ஏராளமான இல்லத்தரசிகளை கழித்து விட்டார்கள்.
தற்போது ரூ.5000 வழங்கியதை தம்பட்டம் அடித்துக் கொள்கிறார். மக்கள் நீங்கள் கொடுக்க வேண்டிய 23,000 கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று கடந்த பத்தாண்டுகளில் இந்த தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் அன்பில் மகேஷ் நிறைய வாக்குறுதிகள் அளித்தார். ஆனால், எதையும் அவர் நிறைவேற்றவில்லை.
எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும், நாங்கள் பொது பிரச்சினையை கையில் எடுத்து நிறைவேற்றி தந்துள்ளோம். துவாக்குடியில் அடுத்தடுத்து இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்க முயன்றபோது மத்திய தரைவழி போக்குவரத்துதுறை அமைச்சருக்கு விதிகளை சுட்டி காட்டி நான் கடிதம் எழுதியதன் விளைவாக அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
இந்த தொகுதியின் எம்எல்ஏ வுடன் நான் மட்டுமல்ல, அதிமுக சாதாரண தொண்டனும் விவாதிக்க தயாராக உள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என பேசினார்.
பிரச்சாரத்தின் போது கூட்டணி கட்சியான பாஜக சார்பில் ஒண்டிமுத்து எஸ் பி சரவணன் திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய தலைவர் நந்தா அமமுக சார்பில் செந்தில்நாதன் கேவிடி கலைச்செல்வன் திருபெரும்புதூருக்கு ஒன்றிய செயலாளர் துளசிதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் திருச்சிகுணா, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் எஸ்.கே.டி கார்த்திக் எஸ் எஸ் ராவணன் திருவெறும்பூர் பகுதி செயலாளர் பாஸ்கர் என்கின்ற கோபால் ராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0