திருச்சி வந்த முதல்வர் ; வரவேற்பு கொடுத்த குழந்தை

Mar 31, 2026 - 22:31
 0  72
திருச்சி வந்த முதல்வர் ; வரவேற்பு கொடுத்த குழந்தை

திருச்சி வந்த முதல்வர் ; வரவேற்பு கொடுத்த குழந்தை

தி​முக கூட்​டணி வேட்​பாளர்​கள் மற்றும் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியும் , ஆதரித்​தும் பரப்புரை மேற்கொள்வதற்காக, தமிழக முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்டாலின் இன்று இரவு திருச்சி வந்தடைந்தார்.

திருவாரூரில் தனது பிரச்சார பயணத்தை இன்று மாலை துவக்கிய தமிழக முதல்வர் நாளை 1-ம் தேதி காலை திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இந்தப் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருவாரூரில் இருந்து சாலை மார்க்கமாக திருச்சி ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு வருகை தந்தார்.

திருச்சி ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் சொகுசு விடுதிக்கு செல்லும் வழியில், அவருக்கு திமுக மற்றும் தோழமை கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

குறிப்பாக, தோழமை கட்சியைச் சேர்ந்த எஸ்.டி.பி. கட்சியினரும் இஸ்லாமிய பெருமக்களும், முதல்வருக்கு வரவேற்பு கொடுத்தனர்.

இதில் 3 வயதுடைய சிறுமி பாத்திமா முதல்வருக்கு புத்தகம் வழங்கி சிறப்பான வரவேற்பை கொடுத்தபோது, முதல்வர் அதை நெகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு குழந்தையை கொஞ்சினார்.

முன்னதாக, கடந்த 2019 மக்​களவைத் தேர்​தல், 2021 சட்​டப்​பேர​வைத் தேர்தல், அதைத் தொடர்ந்து 2024 மக்​கள​வைத் தேர்தலிலும் தனது பிரச்​சார பயணத்தை ஸ்​டா​லின் திருவாரூர், திருச்சியிலிருந்து தொடங்​கி​யது குறிப்​பிடத்​தக்​கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0