முதலில் வந்தார், நேருவிடம் வாழ்த்தும் பெற்றார் 

Mar 30, 2026 - 23:21
 0  46
முதலில் வந்தார், நேருவிடம் வாழ்த்தும் பெற்றார் 

முதலில் வந்தார், நேருவிடம் வாழ்த்தும் பெற்றார் 

திருச்சியை பூர்வீகமாக கொண்டவர் ராஜேந்திரன் என்கிற கெட்டப் ராஜேந்திரன். இவர் விஷால் நடித்த தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர். மேலும் யாமினி கிரியேஷன் என்ற பெயரில் அன்றொரு நாள் என்ற படத்தை தயாரித்து பல்வேறு கெட்டப்புகளில் நடித்து படத்தை வெளியிட்டவர்.

கெட்டப் என்றாலே இவர்தான் என்கிற அளவில் சினிமா தொழில் நட்பு வட்டாரங்களில் பிரபலமானவர். பன்முகம் கொண்ட இவர் அரசியலிலும் தடம் பதித்தவர்

கடந்த பாராளுமன்ற தேர்தலில் செங்கல் சின்னத்தில் போட்டியிட்டு திருச்சி பாராளுமன்ற தொகுதியில் குறிப்பிட்ட வாக்குகளை பிரித்தார்.

இந்த நிலையில் தற்போது தான் வசிக்கும் திருச்சி மேற்கு தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் களம் இறங்கி உள்ளார்.

இதையடுத்து தயாரிப்பாளர் கெட்டப் ராஜேந்திரன் என்கிற ராஜேந்திரன் சுயேட்சையாக போட்டியிட மேற்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சாலை தவவளனிடம் முதல் நபராக வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்தபோது அமைச்சரும் மேற்கு தொகுதியில் மீண்டும் களமிறங்கும் கே. என்.நேரு வேட்பு மனு தாக்கல் செய்ப வர, அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்தும் பெற்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0