குடியரசுத்தலைவர் 3-ம் தேதி ஸ்ரீரங்கம் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு; ஹெலிகாப்டர் ஒத்திகை; 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை- ஆட்சியர்

Sep 1, 2025 - 15:17
 0  12
குடியரசுத்தலைவர் 3-ம் தேதி ஸ்ரீரங்கம் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு; ஹெலிகாப்டர் ஒத்திகை; 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை- ஆட்சியர்

குடியரசுத்தலைவர் 3-ம் தேதி ஸ்ரீரங்கம் வருகை; 5 அடுக்கு பாதுகாப்பு; ஹெலிகாப்டர் ஒத்திகை; 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை- ஆட்சியர்
   குடியரசுத் தலை​வர் திர​வுபதிமுர்மு ஸ்ரீரங்​கம் ரெங்​க​நாதர் கோயி​லில் வரும் 3-ம் தேதி சுவாமி தரிசனம் செய்​கிறார். இதையொட்​டி, ஸ்ரீரங்​கம் யாத்ரி நிவாஸ் எதிரே​யுள்ள ஹெலிபேடு தளத்​தில் பாதுகாப்பு அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
   குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு 2 நாள் பயண​மாக தமிழகத்​துக்கு நாளை (செப்​.2) வரு​கிறார். சென்​னை​யில் பல்​வேறு நிகழ்ச்​சிகளில் பங்​கேற்​கும் அவர், நாளை மறு​நாள் (செப். 3) சென்​னை​யில் இருந்து தனி விமானத்​தில் திருச்சி விமான நிலை​யத்​துக்கு காலை 10.55 மணிக்கு வரு​கிறார். அவரை ஆட்​சி​யர் வே.சர​வணன், அமைச்​சர்​கள் உள்​ளிட்​டோர் வரவேற்​கின்​றனர். 
  இதனைத் தொடர்ந்​து, பகல் 12.10 மணி​யள​வில் ஹெலி​காப்​டரில் திரு​வாரூர் சென்​று, தமிழ்​நாடு மத்​திய பல்​கலையில் நடைபெறும் 10-வது பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்​று, மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​கள் வழங்​கு​கிறார்.
   பின்​னர், திரு​வாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலி​காப்​டரில் புறப்​பட்​டு, ஸ்ரீரங்​கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்​ளிடம் ஆற்றங்கரை பஞ்​சக்​கரை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள ஹெலிபேடு தளத்​துக்கு வரு​கிறார். அங்​கிருந்து காரில் புறப்​பட்டு மாலை 5.20-க்கு ஸ்ரீரங்​கம் ரெங்​க​நாதர் கோயிலுக்கு செல்​கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்​யும் திர​வுபதிமுர்​மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலை​யம் சென்​றடைகிறார்.
   அதே​நேரத்​தில், மாலை 6 மணிக்கு முன்​ன​தாக தரிசனம் முடிந்​தால், ஹெலி​காப்​டர் மூலமே அவர் திருச்சி விமான நிலை​யம் செல்​வார் என்றும் கூறப்​படு​கிறது. திருச்சி விமான நிலை​யத்​தில் இரவு உணவை முடித்​துக்​கொண்​டு, இரவு 7 மணி​யள​வில் தனி விமானம் மூலம் டெல்​லிக்கு புறப்​பட்​டுச் செல்​கிறார்.


   குடியரசுத் தலை​வர் வரு​கையை முன்​னிட்டு ஸ்ரீரங்​கம் யாத்ரி நிவாஸ் எதிரே உள்ள கொள்ளிடக்கரை பஞ்​சக்​கரை ஹெலிபேடு தளத்தை தஞ்​சாவூர் ஹெலிபேடு பிரிவு அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். குடியரசுத் தலை​வர் வரு​கையை முன்​னிட்டு திருச்சி விமான நிலை​யம், ஸ்ரீரங்​கம் பஞ்​சக்​கரை, ரெங்​க​நாதர் கோயில் மற்​றும் அவர் காரில் செல்​லும் சாலை வழித்தடங்களில் 5 அடுக்கு பாது​காப்பு ஏற்​பாடு​கள் செய்​யப்​படும் என்று போலீ​ஸார் தெரி​வித்​தனர்.
   இந்​நிலை​யில், குடியரசுத் தலை​வர் வருகை தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டம் இன்று திருச்சி விமான நிலை​யத்​தி​லும், நண்பகல் ஸ்ரீரங்​கம் கோயி​லிலும் நடை​பெற்றது. இந்​தக் கூட்​டங்​களில் ஆட்​சி​யர் வே.சர​வணன், காவல் ஆணை​யர் என்​.​காமினி, மாநக​ராட்சி ஆணை​யர் லி.மது​பாலன் மற்​றும் விமான நிலைய அதி​காரி​கள், அறநிலை​யத்துறை அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்டனர்.
 

 

முன்னதாக, குடியரசுத்தலைவர் திரௌபதிமுர்மு திருச்சிராப்பள்ளி மற்றும் திருவாரூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணம் கருதி(02.09.2025) முதல் (03.09.2025) அன்று நள்ளிரவு 12 மணிவரை இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது.
   எனவே(02.09.2025) முதல் (03.09.2025) வரை தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் தெரிவித்துள்ளார்.
  ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள ஹெலிபேடு தளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் ஏறி, இறங்கும் ஒத்திகை நடைபெற்றது. இதனை முன்னிட்டு தீயனைப்புத்துறை வாகனங்கள், ஆம்புலன்ஸ், போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் என அப்பகுதியில் முகாமிட்டதால் பெரும் பரபரப்பாகவே காணப்பட்டது ஸ்ரீரங்கம் முழுவதும்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0