பா.ஜ.க-வில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை

Mar 21, 2026 - 19:00
 0  18
பா.ஜ.க-வில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை

பா.ஜ.க-வில் இருந்து விலகுகிறாரா சரத்குமார்? நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியை தக்க வைக்க தி.மு.க-வும் ஆட்சியை பிடிக்க அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி போட்டி போட்டு வருகிறது. மேலும், நாம் தமிழர் கட்சி, த.வெ.க ஆகிய கட்சிகளும் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 

நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி என்கிற பெயரில் கட்சி நடத்தி வந்தார். கடந்த 2024-ஆம் ஆண்டு இவர் திடீரென பா.ஜ.க-வில் இணைத்தார். நள்ளிரவில் தோன்றிய திடீர் எண்ணத்தால் பா.ஜ.க-வில் இணைந்ததாக சரத்குமார் கூறியிருந்தார்.  

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராதிகா விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார். சரத்குமார் பா.ஜ.க-வில் இணைந்து கிட்டத்தட்ட 2 வருடங்களாகிவிட்ட நிலையில் எதிர்பார்த்தது போல எந்த பதவியும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து, இந்த தேர்தலிலும் சரத்குமாருக்கோ அவரது ஆதரவாளர்களுக்கோ எந்த முக்கியத்துவமும் வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், சரத்குமார் தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை தியாகராய நகர் பகுதியில் முக்கிய ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 

தொடர்ந்து பா.ஜ.க-வில் பயணிக்கலாமா அல்லது நமக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியில் இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாமா என்பது குறித்து சரத்குமார் ஆலோசித்து முடிவு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்கள் சந்திப்பில் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0