சேலம் பேருந்து விபத்தில் 8 பேர் பலி; பேருந்து ஓட்டுநர் கைது
சேலம் பேருந்து விபத்தில் 8 பேர் பலி; பேருந்து ஓட்டுநர் கைது
சேலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து தடம் மாறி சரக்கு வாகனம், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் குழந்தை உள்பட 8 பேர் பலியான சம்பவத்தில் அரசுப்பேருந்து ஓட்டுநரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் இன்று 12 மணிக்கு வந்த அரசுப் பேருந்து உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், அதைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது.
இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகத்தில் பயணித்தவர்கள் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானதால் இந்த விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.
இந்த அரசு பேருந்தை சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரிய வனவாசி பனங்காடு பகுதியைச் சேர்ந்த அய்யந்துரை (வயது 49) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இவரது கவனக்குறைவால் விபத்து நடந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அறிந்த கொண்டலாம்பட்டி காவல் நிலைய போலீசார் ஓட்டுநர் அய்யந்துரையை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து சேலம் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ராஜபாண்டியன் தலைமையில் வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களின் விபரம் பின் வருமாறு; 1) மணிகண்டன், 2) இருசாயி, 3) செல்வராஜ், 4) அமுதா, 5) குழந்தை நித்திஷ்கா, 6) ஜீவிகா (11 மாத குழந்தை), 7) முருகன், 8) சத்யா.
சேலம் விபத்தில் பலியானோருக்கு தமிழக முதல்வர் தமது இரங்கலையும், அனுதாப்த்தையும் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0