100% வாக்களிப்பை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் ரங்கோலி கோலம்: ஆட்சியர் உள்பட 500 பேர் உறுதிமொழி ஏற்பு  

Mar 18, 2026 - 17:11
 0  19
100% வாக்களிப்பை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் ரங்கோலி கோலம்: ஆட்சியர் உள்பட 500 பேர் உறுதிமொழி ஏற்பு  

100% வாக்களிப்பை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் ரங்கோலி கோலம்: ஆட்சியர் உள்பட 500 பேர் உறுதிமொழி ஏற்பு  

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் எப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில், நாடு முழுவதும் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ரங்கோலி கோலம் வரைந்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். 

மேலும், வாக்காளர் விழிப்புணர்வு பதாகையில் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதனைதொடர்ந்து 100 சதவீதம் வாக்குப்பதிவை எய்திடும் வகையில் வாக்காளர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும் இருந்தும் பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு, “என் வாக்கு என் உரிமை” “100% வாக்குப்பதிவு”என்ற வாசகங்கள் அடங்கிய பல வண்ணக் கோலங்களை வரைந்து வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

அதனைத் தொடர்ந்து, ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் எனும் உறுதிமொழியினை மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ஆர்.பாலாஜி வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை வாசிக்க 500க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நிறைவாக, திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை கூடுதல் மாவட்டதேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பாலாஜி கொடியசைத்துதொடங்கிவைத்தார். இதில், 500க்கும் மேற்பட்டமகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் கல்லூரி மாணவர்கள், அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் தவறாமல் வாக்களிப்போம், வாக்களிப்பது உங்கள் உரிமை, உங்கள் எதிர்காலம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இப்பேரணியானது மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து தொடங்கி மத்திய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வுகளில், உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.சேஷத்ரிமயும் தீபிசானு, திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) சுரேஷ், மாவட்ட வருவாய் அலுவலர், ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் ஆர்.ராஜேந்திரன், மகளிர் சுயஉதவிக்குழுவினர், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0