தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ; தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது 

Mar 15, 2026 - 16:46
Mar 15, 2026 - 16:57
 0  43
தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ; தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது 

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு; மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை ; தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது 

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இன்று தேர்தல் அட்டவணையை அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது. மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவித்தார். இது குறித்து விபரம் வருமாறு;

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையம், புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் தேர்தல் தேதியை அறிவித்தது.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றங்களுக்கான கால அவகாசம் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைவதால், புதிய அரசாங்கத்தைத் தேர்வு செய்ய சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ளன. 

கடந்த 2021 மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் எட்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் 2026-ல் குறைவான கட்டங்களில் நடைபெறுகிறது.

தமிழகத்தில் தேர்தலை சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் 75,032 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் ஒரு தலைமை அதிகாரி, 3 வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் ஒரு அலுவலக உதவியாளர் குழு செயல்படும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 3,45,160 பணியாளர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 8.5 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பி.எல்.ஓ.க்கள் அனைவருக்கும் தேர்தல் ஆணையத்தால் அடையாள அட்டை வழங்கப்படும். வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவிமூலம் கண்காணிக்கப்படும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்கு எண்ணிக்கை நிலவரம் தெரியப்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் உள்ள தேனி மாவட்டத்தின் வருசநாடு மலைப்பகுதிகளில் தேர்தல் அதிகாரிகள் 3 மணி நேரம் கடுமையான பாதைகளில் பயணம் செய்து வெள்ளி மலையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வெறும் ஐந்து வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக ஏற்பாடுகளை செய்ய உள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026;

வேட்பு மனு துவக்க நாள் : மார்ச் 30,

வேட்பு மனு கடைசி நாள் : ஏப்ரல் 06,

வேட்புமனு திரும்பபெறுதல்: ஏப்ரல் 09

வேட்பு மனு பரிசீலனை: ஏப்ரல் 07

வாக்கு பதிவு: ஏப்ரல் 23

வாக்கு எண்ணிக்கை: மே 4

5 மாநிலங்களில் பொதுத்தேர்தல் - வாக்குப்பதிவு நாட்கள்.*

👉 அசாம் ஏப்ரல் 9  

👉கேரளா ஏப்ரல் 9

👉 புதுச்சேரி ஏப்ரல் 9

👉 தமிழ்நாடு ஏப்ரல் 23

👉 மேற்குவங்கம் (2 கட்டமாக)ஏப்ரல் 23, ஏப்ரல் 29.

👉  வாக்கு எண்ணிக்கை மே 4 

எனத் தேர்தல் ஆணையத்தால் தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தேர்தல் நடத்தை விதிகளும் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் என்னென்ன?

புதிய அறிவிப்பு, திட்டங்களை அரசால் வெளியிட முடியாது .தலைவர்களின் சிலைகள் மூடப்படும்.

அரசு திட்டங்களில் உள்ள தலைவர்களின் பெயர்கள் மறைக்கப்படும். எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் தங்களுக்கான அதிகாரங்களை பயன்படுத்த இயலாது.

அரசு வாகனங்கள் அல்லது கட்டடங்களை பரப்புரைக்கு பயன்படுத்த இயலாது. சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகம் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வரும்.

ஒரே இடத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பணியாற்றிய அதிகாரிகள் இட மாற்றம் செய்யப்படுவார்கள். பரப்புரை, மேடை பேச்சுகள், பொது நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் தேர்தல் ஆணைய முன் அனுமதி பெற வேண்டும். பணம் மற்றும் பொருட்கள் போக்குவரத்து தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படும்.

வாகன சோதனையை தொடங்கிய காவல்துறையினர்

தேர்தல் நடத்தை விதிகள் இன்று மாலை முதல் அமலுக்கு வந்த நிலையில், பழனியில் வாகன சோதனையை காவல்துறையினர் தொடங்கியுள்ளனர். துணை ராணுவப் படையினர் உடன் இணைந்து சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

புகைப்படங்கள் அகற்றும் பணிகள் தொடக்கம்..

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்த நிலையில், மாவட்ட ஆட்சியர் வளாகங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்களை அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளன. மேலும், அரசு வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தும் பணியும் தொடங்கியுள்ளது.

வாக்காளர் சிறப்பு சீர்திருத்த பணிக்கு பிறகு, இந்த மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது கவனிக்கத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0