தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு; தமிழகத்திற்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல்?

Mar 15, 2026 - 10:19
 0  71
தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு; தமிழகத்திற்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல்?

தமிழகம் உள்பட 5 மாநில தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு; தமிழகத்திற்கு ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் தேர்தல்? 

தமிழகம், புதுவை, கேரளம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இன்று மாலை 4 மணிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாத வெளியிடும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் வேட்புமனு தாக்கல் தேதி, பரிசீலனை செய்வதற்கான நாள், வாபஸ் பெறும் நாள், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை அடங்கிய அட்டவணை தயாராக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் கட்சிகளும் ஏற்கனவே ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நடத்தும் செய்தியாளர் சந்திப்பில், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக வரும் ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதிக்குள் தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏப்ரல் 13ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என சொல்லப்பட்ட நிலையில் சனி, ஞாயிறு விடுமுறை, ஏப்ரல் 13 ஆம் தேதி தேர்தல் விடுமுறை, ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்கு மக்கள் வாக்களிக்க வராமல், சுற்றுலாவுக்கு சென்று விடுவார்கள் என்பதால் அந்த தேதிக்கு ஒரு எதிர்ப்பு இருந்தது. மேலும், ஏப்ரல் மாதம் மதுரையில் சித்திரை திருவிழா வருவதால் அதற்கேற்ப தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதன் பிறகு ஏப்ரல் 27-ம் தேதி திக்விஜயமும், 28ஆம் தேதி மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், ஏப்ரல் 29-ம் தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. எனவே 20 முதல் 26 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

க.சண்முகவடிவேல் 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0