இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எனக் கூறுவது மிகப்பெரிய பொய் - திருச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

Mar 10, 2026 - 17:57
 0  39
இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எனக் கூறுவது மிகப்பெரிய பொய் - திருச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு எனக் கூறுவது மிகப்பெரிய பொய் - திருச்சியில் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

பிரதமர் தலைமையில் திருச்சியில் நாளை தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் பஞ்சப்பூர் அருகே நடைபெற இருக்கின்றது. இந்தக் கூட்டம் தொடர்பாக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது ;

பிரதமர் தலைமையில் திருச்சி பஞ்சப்பூரில் அரசு விழா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் எ.டி.ஏ வின் தமிழக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், த.மா.க தலைவர் ஜி.கேவாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐ.ஜே.கே தலைவர் பாரிவேந்தர், த.ம.மு.க தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

நாளை நடைபெறும் விழா தமிழ்நாட்டின் ஆட்சி மாற்றத்திற்கான விழாவாக இருக்கும். இதில் 7 லட்சம் பேர் பங்கேற்பார்கள்.

பிரதமர் தலைமையில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறாது. விரைவில் நாங்கள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்குவோம்.

திருச்சியில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் தவெகவுடன் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்பது வதந்தி. கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய்-க்கு தற்போது 3-வது முறையாக சிபிஐ சம்மன் கொடுத்துள்ளது. இதற்கும், பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சிபிஐ, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் உள்ளிட்டவை சுதந்திரமான அமைப்பு. இவற்றுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இதுவரை தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.

தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம் குறித்து பிரதமர் மோடி இங்கு மட்டுமல்ல, பல்வேறு நாடுகளிலும் பேசியுள்ளார் என்பதை எதிரணியினர் மறந்து விட்டார்கள். தமிழுக்காகவும், தமிழ் வளர்ச்சிக்காகவும் திமுக என்ன செய்துள்ளது என்பதை முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் யாரும் கேட்பது இல்லை. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்றார்கள், 300 சதவீதம் உயர்த்தி உள்ளார்கள்.

மின் கட்டணம் மாதம் ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று சொன்னதையும் நிறைவேற்றவில்லை. சிலிண்டருக்கு ரூ.100, பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5 குறைப்பதாக சொன்னார்கள், அதையும் செய்யவில்லை. ஆயிரம் தடுப்பணைகள் கட்டுவோம் என்றார்கள், ஆனால் ஒரு தடுப்பணை கூட கட்டவில்லை. இதனால், ஆண்டுக்கு 200 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் 34 லாக் அப் மரணங்கள் நடந்துள்ளன. தினமும் படுகொலைகள் நடக்கின்றன. அதேபோன்று கஞ்சா போதையில் சாலையில் செல் பவர்களை, விரட்டி விரட்டி வெட்டுகிறார்கள். முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில், அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு படுமோசமாக உள்ளது. 

தமிழ்நாட்டில் மீண்டும் திமுக தான் வெல்லும் என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால், யார் வெற்றி பெறுவார்கள் என்பதை தீர்மானிக்க போவது தமிழக மக்கள் தான்.

திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதம் 1000 கொடுக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் வந்ததால் அதை கொடுத்தார்கள். இந்தாண்டு தேர்தலால் பொங்கல் பணம் கொடுத்தார்கள்.

எங்கள் கூட்டணியில் புது கட்சிகள் வரலாம். ஆனால் விஜய் வருவது குறித்து நாங்கள் கருத்து கூற முடியாது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய். 

நான் கேஸ் டீலர், எங்கு உங்களுக்கு சிலிண்டர் வேண்டுமோ நான் தருகிறேன். ஹோட்டல்களில் உணவுகளை குறைத்ததற்கும் சிலிண்டருக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஹோட்டல்களில் உணவு இல்லை என எதிர்க்கட்சிகாரர்கள் எழுதி போட்டிருப்பார்கள். அதிமுக தனித்து தான் ஆட்சி அமைக்கும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மற்ற கட்சிகள் குறித்து திமுக கவலைப்பட வேண்டியதில்லை.

விஜய் தங்களுடைய கட்சியின் கொள்கை என்ன என்பதை தெளிவுபடுத்தி விட்டு கொள்கை எதிரி பாஜக என கூறட்டும். வெறும் கொள்கை என்கிற வார்த்தையை மட்டும் கூறுவதால், அதற்கு என்ன அர்த்தம் என தெரியவில்லை. சீனி என எழுதி வைத்தால் மட்டும் இனிக்காது என்றார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0