தமிழகத்தின் குரலாக மாநிலங்களவையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவேன்- கிறிஸ்டோபர் திலக்

Mar 7, 2026 - 18:12
 0  19
தமிழகத்தின் குரலாக மாநிலங்களவையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவேன்- கிறிஸ்டோபர் திலக்

தமிழகத்தின் குரலாக மாநிலங்களவையில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவேன்- கிறிஸ்டோபர் திலக் 

மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில் தமிழகத்தில் 6 இடங்கள் தற்பொழுது காலியாகியுள்ளது. இதற்கான மனு தாக்கல் முடிவுற்றது.

திமுக சார்பில் நான்கு இடங்கள் இருந்த நிலையில் திமுக சார்பில் திருச்சி சிவாவும், பேராசிரியர் கான்ஸ்டன்ட்டைன் ரவீசந்திரன் ஆகியோர் திமுக சார்பிலும், கூட்டணி கட்சிகளான தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ஆகியோரும் மனு தக்கல் செய்தனர். இவர்களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்த கிறிஸ்டோபர் திலக் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது; 

கடந்த எட்டு வருட காலமாக காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல என்னுடன் இருக்கும் ஒவ்வொரு காங்கிரசாருக்கும் பெருமையான விஷயமாகும். தொண்டனுக்கும் மாபெரும் வெற்றி.

மணிப்பூர், சிக்கிமில் பணியாற்றியது அது காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு பொறுப்பு. தற்பொழுது பணியாற்ற இருப்பது ஒரு கான்ஸ்டியூசனல் போஸ்ட். இதற்காக மாநிலங்களவையில் பேசக்கூடிய ஒரு பணி. தமிழகத்தில் நிலவும் பிரச்சனைகளை மாநிலங்களவையில் எடுத்து உரைக்கும் வகையில் கிடைத்த இந்த வாய்ப்பை நல்லபடியாக பயன்படுத்துவேன்.

காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் சோனியா, ராகுல், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

திருச்சி மாநகரில் இளைஞர் காங்கிரஸில் எனது பணியை தொடங்கி இன்று தேசிய அளவில் பல மாநிலங்களில் பணியாற்றி உள்ளேன். ராஜ்ய சபாவில் தமிழக பிரச்சினைகளை எடுத்து வைத்து, மாநிலத்தின் தேவைகளை நிறைவேற்றித் தருவேன்.

திருச்சிக்கு நான்கு எம்பி, ஐந்து எம் பி இருப்பதாக நாளிதழ் உள்ளிட்டவைகளில் விமர்சனம் செய்துள்ளார்கள்.

திருச்சி மாவட்ட மக்களுடன் கலந்து ஆலோசித்து, இங்கு இருக்கும் பிரச்சினைகள் குறித்து ராஜ்யசபாவில் குரல் கொடுப்பேன்.

ஏற்கெனவே இங்கு உள்ள எம்.பிக்களுடன் இணைந்து பணியாற்றி, திருச்சி மாநகரின் முன்னேற்றத்துக்கு, வளர்ச்சிக்கு பாடுபட்டு, திருச்சி மாநகரை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன்.

மோடி அடிக்கடி தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு?

பிரதமர் மோடி ஒவ்வொரு முறை தமிழகம் வரும்போதும், அவருக்கு ஒரு வேட்டி சட்டையை கொடுத்து, கும்பகோணம் டிகிரி காபி ஆத்துவது போல ஒரு சீன் கொடுத்துவிடுவார்கள். அவருக்கு எழுதிக் கொடுத்த ஸ்க்ரிப்ட்டை பேசிவிட்டு செல்வார். ஒவ்வொரு முறை அவர் வரும்போது தமிழகத்தில் அரசியல் ரீதியாக அவர் என்ன செய்கிறார் என்பதை உற்று நோக்க வேண்டும். 

இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைவறையும் சமூகரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாம் உற்றுப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0