திமுக மாநில மாநாட்டு திடலில் பிரத்யேக ஏற்பாடுகள்; முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு - சிறுகனூரில் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சி மாநில மாநாட்டு திடலில் பிரத்தியேக ஏற்பாடுகள்; முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்- சிறுகனூரில் அமைச்சர் கே.என்.நேரு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூரில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில், திமுகவின் 12-வது மாநில மாநாடு மார்ச் 9, 2026 அன்று நடைபெறுகிறது. சுமார் 200 முதல் 400 ஏக்கர் பரப்பளவில், 10 லட்சம் திமுகவினரை திரட்டி தேர்தல் முன்னோட்டமாக, பிரம்மாண்டமான ஏற்பாடுகளுடன் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது;
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி 'ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற தலைப்பில், திமுகவின் 12-வது மாநில மாநாடு மார்ச் 9-ம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தலைமையில் நடைபெற இருக்கின்றது.
திருச்சியில் நடைபெறும் திமுக மாநில மாநாட்டில் 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் அளவிற்கு மாநாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மூன்று லட்சம் நாற்காலிகள் தொண்டர்கள் அமரும் வகையில் போடப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாமல் இரண்டு பக்கமும் நின்று கொண்டு மாநாட்டை கண்டுகளிக்க பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் பேர் நின்று கொண்டு மாநாட்டை ரசிக்கும் வகையில் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் கழிவறை வசதியும் தனித்தனியாக செய்யப்பட்டுள்ளது. இரண்டு பக்கமும் 10 லட்சம் லிட்டர் தண்ணீர் கொள்ளளவு கொண்ட தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.
24 ஆயிரம் வாகனங்கள் வருகை தர உள்ளது என்பதால் மின்விளக்கு வசதி, பார்க்கிங் வசதி பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது. உங்கள் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு அருகிலேயே வாக்கிங் வசதி செய்யப்பட்டிருப்பதால் அங்கே கொண்டு வந்து வாகனங்களை நிறுத்திவிட்டு திடலுக்கு உள்ளே வந்தால் 500 மீட்டர் தொலைவுக்குள் நடந்து வந்துவிடலாம். தாங்கள் கொண்டுவரும் வாகனங்களை சாலையின் ஓரங்களில் ஆங்காங்கே நிறுத்தினால் பின்வரும் வாகனங்கள் மாநாட்டிற்கு வருவதற்கு காலதாமதம் ஆகும் சுமார் 10 கிலோமீட்டர் தள்ளி நிறுத்திவிட்டு இறங்கி நடந்து வரும் சூழல் உருவாகும், எனவே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு அருகிலேயே வாகனங்களை கொண்டு வந்து நிறுத்திவிட்டு திடலுக்கு உள்ளே வர வேண்டுகிறேன்.
இந்த மாநாட்டு முன்னேற்பாடு பணிகளை மாவட்டச் செயலாளர்கள் உடன் பேசி கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாநாடு வரும் ஒன்பதாம் தேதி மாலை சரியாக 3 மணிக்கு துவங்க உள்ளது.
மாநாட்டிற்கு முன்னதாக இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சியும், அப்துல் குத்தூஸ் இசை நிகழ்ச்சியும் நடைபெறும். சரியாக மார்ச் ஒன்பதாம் தேதி மாலை 5:30 மணிக்கு தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரியில் இருந்து புறப்பட்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறுகனூரில் உள்ள விழா மேடைக்கு வருகை தருவார். விழா மேடை அருகே இரு வண்ணக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்கள் வரவேற்பை பெறுவார். அதன் பின்னர் நிகழ்ச்சிகள் நடைபெறும்.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் இதே இடத்தில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தான் ஏழு வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் அறிவித்தார்.
அதேபோல், இந்த மாநாட்டிலும் ஒன்று, இரண்டு வாக்குறுதிகள் தமிழக முதல்வர் சொல்வதற்கு வாய்ப்பு உள்ளது. நிதி நிலைமைக்கு ஏற்ப வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் அறிவிப்பார்.
திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இருக்கிறதா இல்லையா என்பது தெரியவில்லை, கூட்டணிக் கட்சியினர் அழைப்பது குறித்து தமிழக முதல்வர் முடிவெடுப்பார். மாநாட்டிற்கு வருகை தரும் தொண்டர்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றமும் காவல்துறையினர் செய்ய உள்ளனர். அதேபோல் மாநாட்டு திடல் அருகே தொலைத்தொடர்புக்கென மூன்று பிரத்தியாக டவர்கள் தற்காலிக டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொலைத் தொடர்பில் எந்தவித சிக்கலும் ஏற்படாத வண்ணமும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது மாநகர மேயர் அன்பழகன், மாவட்டச் செயலாளர்கள் வைரமணி காடுவெட்டி தியாகராஜன் உள்ளிட்ட திமுக முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
1
Wow
0