திருச்சி மாநகரில் நாளை விநாயகர் விசர்ஜனம்; திருச்சி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் - காவல் ஆணையர்
திருச்சி மாநகரில் நாளை விநாயகர் விசர்ஜனம்; திருச்சி போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் - காவல் ஆணையர்
திருச்சி மாநகரத்தில் நாளை 29.08.2025 அன்று நடைபெறும் விநாயகர் சிலை கரைப்பு (விசர்ஜனம்) ஊர்வலத்தை முன்னிட்டு, காவல் ஆணையர் ந.காமினி, மேற்பார்வையில், மொத்தம் 1500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் நெரிசல் ஏற்படும் பகுதிகளில் கூடுதல் காவல் துறை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் ஊர்வலம் சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 29.08.2025 மதியம் 4.00 மணி முதல் 30.08.2025 அதிகாலை 6.00 மணி வரை திருச்சி மாநகரில் வாகனப் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன, விநாயகர் ஊர்வலம் செல்லக்கூடிய பகுதிகளில் மதுபான கடைகளும் அடைக்கப்படும் என மாநகர காவல் ஆணையர் காமினி தெரிவித்துள்ளார்.
துறையூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர்
ஆகிய மார்க்கத்திலிருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வரும் புறநகர் பஸ்கள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து கொள்ளிடம் பாலம், காவல் சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்காவல் டிரங்க் ரோடு, திருவானைக்காவல் சந்திப்பு, மாம்பழச்சாலை சந்திப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம், ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்காவல் சந்திப்பு, திருவானைக்கோவில் டிரங்க் ரோடு, காவல் சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.
லால்குடி, சமயபுரம், மண்ணச்சநல்லூர் மற்றும் வாத்தலை பகுதிகளிலிருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் வரும் டவுன் பஸ்கள் அனைத்தும் நெ.1 டோல்கேட்டிலிருந்து கொள்ளிடம் பாலம், சோதனைச்சாவடி எண்.6, திருவானைக்காவல் டிரங்க் ரோடு, திருவானைக்காவல் சந்திப்பு, மாம்பழச்சாலை சந்திப்பில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையம், ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்காவல் சந்திப்பு, திருவானைக்காவல் டிரங்க் ரோடு, சோதனைச்சாவடி எண்.6, புதிய கொள்ளிடம் பாலம் வழியாக செல்ல வேண்டும்.
சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி.ஜங்ஷன், சாஸ்திரி ரோடு, அண்ணா நகர் உழவர் சந்தை, வ.உ.சி. சிலை, நீதிமன்ற சந்திப்பு, முத்தரையர் சிலை சந்திப்பு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, டி.வி.எஸ். டோல்கேட், பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ் ரோடு, சஞ்சீவி நகர் சந்திப்பு, கே.கே.சாலை சந்திப்பு, திருவானைக்காவல் மேம்பாலம், மாம்பழச்சாலை, அம்மாமண்டபம், ஸ்ரீரங்கம் பழைய பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றி விட்டு பின்னர் ராஜகோபுரம், காந்தி ரோடு, திருவானைக்காவல் சந்திப்பு, சென்னை பைபாஸ் ரோடு வழியாக மீண்டும் அதே வழியில் சத்திரம் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து திருவெறும்பூர் துவாக்குடி செல்லும் டவுன் பஸ்கள் அனைத்தும் கலைஞர் அறிவாலயம், கரூர் பைபாஸ் ரோடு, கே.டி.ஜங்ஷன், சாஸ்திரி ரோடு, அண்ணா நகர் உழவர் சந்தை, வ.உ.சி. சிலை, நீதிமன்ற சந்திப்பு, முத்தரையர் சிலை சந்திப்பு, தலைமை தபால் நிலைய சந்திப்பு, டி.வி.எஸ். டோல்கேட், பால்பண்ணை ரவுண்டானா வழியாக சென்று மீண்டும் அதே வழியில் சத்திரம் பஸ் நிலையம் செல்ல வேண்டும்.
கோயம்புத்தூர், கரூர் மார்க்கத்திலிருந்து தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் குளித்தலை காவிரி பாலத்தில் திருப்பி விடப்பட்டு, முசிறி, நெ.1 டோல்கேட், சென்னை பைபாஸ் சாலை, பால்பண்ணை ரவுண்டானா வழியாக தஞ்சாவூருக்கும், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக புதுக்கோட்டைக்கும் செல்ல வேண்டும்.
தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கத்திலிருந்து கரூர் செல்லும் சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் பால்பண்ணை ரவுண்டானா, சென்னை பைபாஸ்ரோடு, காவேரி பாலம், நெ.1 டோல்கேட், வழியாக முசிறி, குளித்தலை சென்று அங்கிருந்து கரூர் செல்ல வேண்டும்.
விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தையொட்டி வாகனப் போக்குவரத்து வழிதடங்களில் மேற்கண்டவாறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊர்வலம் வரும் பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட வாய்ப்புள்ள சமயங்களில் மேலதிகாரிகளின் ஆலோசனையின்படி மேற்படி போக்குவரத்தில் அவ்வப்போது சிறுசிறு மாற்றங்கள் செய்யப்படும். அனைத்து தரப்பினரும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளைக் கடைபிடித்து, காவல்துறைக்கு ஒத்துழைக்கும்படி திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி கேட்டுக்கொண்டுள்ளார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0