திருச்சியில் 7ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் மாபெரும் பேரணி- ரெக்ஸ்

Feb 5, 2026 - 18:29
 0  9
திருச்சியில் 7ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் மாபெரும் பேரணி- ரெக்ஸ்

திருச்சியில் 7ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் மாபெரும் பேரணி- ரெக்ஸ் 

மகாத்மா காந்தி பெயரில் உள்ள 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை மகாத்மா பேரிலேயே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி 7-ம் தேதி திருச்சியில் காங்கிரஸ் சார்பில் பேரணி நடைபெற இருப்பதாக திருச்சி மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும், மாவட்ட காங்கிரஸ் தலைவருமான ரெக்ஸ் தெரிவித்துள்ளார்.

திருச்சி காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் திருச்சி மாநகர மாவட்ட தலைவர் ரெக்ஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது ;

காங்கிரஸ் 2004ல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்காக சோனியா காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியில் ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படும் என உறுதியளித்ததின் பேரில் மகாத்மா காந்தி பெயரில் 100 நாள் வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை மன்மோகன் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பயன் பெறும் இத்தட்டம் செயல்படுத்தப்பட்டது.

பாஜக அரசு பல்வேறு பிளவுகளை உருவாக்கும் நோக்கில் மகாத்மா காந்தி 100நாள் வேலை வாய்ப்பு பணியாளர் குறைப்பு ஊதியம் வழங்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டனர்.

ஒரு மாதம் முன்பு மத்திய அரசு சட்டத்தின் பெயரை விபி-ஜி ராம் ஜி" அதாவது (விக்சித் பாரத்-கேரன்ட்டி ஃபார் ரோஜ்கர் அண்ட் அஜீவிகா மிஷன் கிராமின்)"என பெயர் மாற்றம் செய்யப்பட்டதுடன் 40%சதவிகித மாநில அரசு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

இதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். மகாத்மா காந்தி பெயரிலேயே தொடர வேண்டும், மகாத்மா காந்தி பெயரில் மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இன்று பாதையாத்திரை நடைபெறுகிறது.

இதில் தமிழக பொறுப்பாளர் வேணுகோபால், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தொகை ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக வரும் 7ம்தேதி சனிக்கிழமை திருச்சி மெயின்கார்டுகேட்டில் உள்ள மகாத்மாசிலை முன்பு பாதயாத்திரை துவங்கி சிங்காரத்தோப்பு வழியாக காந்தி மார்க்கட் வரை சென்று அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த பாதை யாத்திரையில் திருச்சி, அரியலூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், கட்சியினர் திரளாக பங்கு பெறுகின்றனர்.

இந்த கண்டன போராட்டத்தில் அகில இந்திய பொதுச் செயலாளர் கிரிஷ் கோயங்கி, முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் ராஜலிங்கம் ஆகியோர் உடன் இருந்தனர். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0