பாரம்பரிய காஞ்சிப் பட்டில் பட்ஜெட் வாசித்த நிர்மலா சீதாராமன்
பாரம்பரிய காஞ்சிப் பட்டில் பட்ஜெட் வாசித்த நிர்மலா சீதாராமன்
நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழகத்தின் புகழ்பெற்ற காஞ்சிபுரம் கைத்தறி நெசவு பட்டுப் புடவையை அணிந்து வந்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், ஒவ்வொரு முறையும் நாட்டின் கைத்தறி பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புடவைகளை அணிந்து வருவது வழக்கம்.
இன்று, நிர்மலா சீதாராமன் அடர் இளஞ்சிவப்பு நிற காஞ்சிபுரம் பட்டுப் புடவை அணிந்திருந்தார். ஊதா நிற கட்டம் போட்ட காஞ்சிபுரம் பட்டுப் புடவையில், இளம் பொன் பழுப்பு நிற பார்டர் இடம்பெற்றிருந்தது. இந்த மெஜந்தா நிற சேலையில் ஊதா நிற பார்டர் உள்ளது. இது ஒரு கம்பீரமான, ஆனால் பாரம்பரிய தோற்றத்தை வெளிபடுத்துகிறது. அத்துடன் நிர்மலா சீதாராமன் அடர் நிற கம்பளி சால்வையும், மஞ்சள் நிற ஸ்வெட்டரும் அணிந்திருந்தார். பட்டு மற்றும் நுணுக்கமான கைவினைத்திறனுக்காக புகழ்பெற்ற காஞ்சிபுரம் பட்டுப் புடவைகள், இந்தியாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கைத்தறி நெசவுகளில் ஒன்றாகும்.
தமிழகம் இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் நிலையில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளை அணிந்திருப்பது கவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0