டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு; திருச்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Jan 28, 2026 - 16:41
 0  129
டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு; திருச்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

டாஸ்மாக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்க முடிவு;
திருச்சி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

   

தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் நடைபெற்றது.
  இந்தக்கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் சிவா, மாநில பொதுச்செயலாளர் ஆர்.பி.சந்திரகுமார், மாநில பொருளாளர் ராஜவேல், சிறப்பு தலைவர் இரணியப்பன் ஆகியோர் கலந்துக்கொண்டு டாஸ்மாக் பணியாளர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினர்.
 

மேலும், டாஸ்மாக் விற்பனையாளர்கள் காலிபாட்டில் வாங்க வேண்டிய நிர்பந்தத்தால் தற்போது ஏற்பட்டுள்ள பணிச்சுமை பற்றி அனைவரிடமும் ஆலோசனை நடத்தப்பட்டது.  கூட்டத்தில் திருச்சி மாநகர ஒருங்கிணைப்பாளராக மோகன் தேர்வு செய்யப்பட்டார். மேலும், வருகின்ற 12-ம் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தம் மற்றும் 18-ம் தேதி கூட்டுக்குழு சார்பாக நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் திரளான பணியாளர்கள் கலந்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் திருச்சி மாவட்ட தலைவர் பழனிவேல், மாவட்ட செயலாளர் ப.மணிகண்டன், மாவட்ட பொருளாளர் கே.தமிழ்ச்செல்வன் மற்றும் திருச்சி மாவட்ட டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0