மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி
மகாராஷ்டிரத் துணை முதல்வர் அஜித் பவார் விமானம் விபத்தில் சிக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித் பவார் பயணித்த விமானம், தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகச் சொல்லப்படுகிறது. அவர் பாதுகாப்பாக உள்ளாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
மகாராஷ்டிராவில் இப்போது பாஜகவின் என்டிஏ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. பட்னாவிஸ் முதல்வராக இருக்கும் நிலையில், ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர்.
இதற்கிடையே மகாராஷ்டிரா துணை முதல்வரும், என்சிபி தலைவருமான அஜித் பவார் பயணித்த விமானம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இன்று காலை மாநிலத்தின் பாராமதியில் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் அஜித் பவார் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளித்த போதும் அஜித் பவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது
உயர் அதிகாரிகள் கருப்பு பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அஜித் பவாருடன் 5 பேர் பயணித்ததாகவும் முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0