திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை- ஆட்சியர்

Jan 25, 2026 - 13:37
 0  43
திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை- ஆட்சியர்

திருச்சியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை- ஆட்சியர்

  தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நாளை 26-ந்தேதி தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகின்றனர்.
இதனை முன்னிட்டு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி வருகை தருகின்றார். திருச்சியில் திருமண நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். முதல்வர் திருச்சி வருகையை முன்னிட்டு முதல்வர் பயணிக்கும் சாலைகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்பதாக மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;
   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தருவதை முன்னிட்டு, பாதுகாப்பு காரணம் கருதி  26.01.2026 மற்றும் 28.01.2026 ஆகிய  இரண்டு நாட்கள் நள்ளிரவு 12 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது.    
   எனவே,  26.01.2026  மற்றும்  28.01.2026  ஆகிய  இரண்டு  நாட்கள் தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்க்கண்டவாறு திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0