நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகம்

Jan 23, 2026 - 16:49
 0  18
நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகம்

நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகம் 

 

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை முன்னிட்டு நாடு முழுவதும் இளைஞர்களால் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 அந்த வகையில் நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவனத் தலைவர் சுகு பூப்பாண்டியன் உத்தரவின்படி, நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக திருச்சி பொன்மலைப்பட்டி புதுப்பாலம் அருகே நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மாநில பொது செயலாளர் ஜெபி சுபாஷ் சந்திர போஸ் வரலாற்றை சிறப்புரையாற்றி மலர் தூவி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில செயலாளர் மணிகண்ட பிரபு, திருச்சி மாவட்ட தலைவர் கண்ணன், திருச்சி மாவட்ட துணை தலைவர் பாலா, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் பரமேஸ்வரி, மாவட்ட இளைஞர் அணி தலைவர் முருகபாண்டியன், திருவெறும்பூர் ஒன்றிய துணை செயலாளர் மணிகண்டன், திருச்சி மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் லால்குடி கேஜிஎப் சந்துரு கலந்து கொண்டனர். மேலும் திருச்சி மாவட்ட மகளிர் அணி தலைவி ரம்யா மணிகண்டன், திருச்சி மாவட்ட மகளிர் அணி செயலாளர் சங்கீதா, மகளிர் அணி துணை செயலாளர் புனிதா மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியை கண்டு இளைஞர்கள் 25க்கும் மேற்பட்டவர்கள் தன் எழுச்சியாக இயக்கத்தில் இணைந்தனர்.

 நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் சிறப்பாக செயல்பட்ட பெண் போராளிகளுக்கு அக்னி சிறகுகள் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. விழாவில் ஓம் நற்பவி பொதுநல அறக்கட்டளை நிறுவனத் தலைவரும், குற்றம் குறைகள் புலனாய்வு கவுன்சில் உறுப்பினருமான நற்பவி. முத்துசூர்யா கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0