ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்- முதல்வர் மு க ஸ்டாலின்

Jan 20, 2026 - 11:50
 0  12
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்- முதல்வர் மு க ஸ்டாலின்

ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்- முதல்வர் மு க ஸ்டாலின் 

ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2026ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம் பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை கூடியது. வழக்கம் போல ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், கடந்த ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் ஆளுநர் உரை வாசிக்கப்படாமல் கூட்டத் தொடர் ஆரம்பமானது.

சட்டமன்ற நடைமுறைகளின்படி, சட்டசபைக் கூட்டத் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. ஆனால், அவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்பதைக் காரணமாகக் காட்டி, தமிழக அரசு தயாரித்துக் கொடுத்த உரையை வாசிக்க ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்ததாக கூறப்படுகிறது.

தேசிய கீதத்திற்குப் பிறகே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டும் என்ற தனது நீண்டகால நிலைப்பாட்டை வலியுறுத்தும் வகையில், அவர் சில நிமிடங்களில் அவையை விட்டு வெளியேறினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை படிக்காமல் பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டப்பேரவை விதி 17ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் சென்றததை இப்பேரவை ஏற்கவில்லை. கணினியில் பதிவேற்றம் செய்துள்ள ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் ஆளுநர் படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.

பேரவைத் தலைவர் அப்பாவு படிக்கவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் முன்மொழியும் தீர்மானம் பேரவை நடவடிக்கை குறித்து இடம் பெறலாம் என்ற தீர்மானத்தை நான் மொழிகிறேன்

நீண்டகால பாரம்பரியம் கொண்ட மக்கள் சபையின் மாட்சிமையை அவமதிக்கும் செயலாக இருக்கும் என்றே கருதுகிறேன். அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும், வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் மாண்பை ஆளுநர் காக்க வேண்டும்.

பேரவையின் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை அமலுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

முன்னதாக இன்று காலை சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என். ரவியை, சபாநாயகர் அப்பாவு மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார். மேலும், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் வரலாற்றுப் புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.

2026ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறியிருக்கிறார். இதன் மூலம் தொடர்ந்து 4 முறை ஆளுநர் உரையை புறக்கணித்து இருக்கிறார். 2023 பகுதியளவு வாசித்த ஆளுநர், 2024, 2025ஆம் ஆண்டிலும், தற்போது 2026 என தொடர்ந்து ஆளுநர் தமது உரையை புறக்கணித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0