உலகை ஆளும் திருச்சி ஆளுமை; ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத்தலைவராக பொறியாளர் எம்.முருகானந்தம் நியமனம்

Jan 19, 2026 - 14:49
 0  27
உலகை ஆளும் திருச்சி ஆளுமை; ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத்தலைவராக பொறியாளர் எம்.முருகானந்தம் நியமனம்

உலகை ஆளும் திருச்சி ஆளுமை; ரோட்டரி இன்டர்நேஷனல் துணைத்தலைவராக பொறியாளர் எம்.முருகானந்தம் நியமனம்


    ரோட்டரி இன்டர்நேஷனலின் இயக்குநர்களுள் (2025-2028) ஒருவராக பதவி வகித்து வரும் திருவெறும்பூரைச்சேர்ந்த எம்.எம்.எம் என அனைவராலும் அழைக்கப்படும் எம்.முருகானந்தம் 2026-2027-ம் ஆண்டிற்கான ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்.
  ரோட்டரி இன்டர்நேஷனலின் வரலாற்றில் தமிழர் ஒருவர் அதுவும் திருச்சியைச்சேர்ந்த ஒருவர் முதன்முறையாக உலகளாவிய அமைப்பில் இத்தகைய உயர் பதவியை எட்டியிருக்கின்றார் என்பது வரலாற்றுப் பெருமை தான்.
  ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர்களாக ஏற்கனவே 3 இந்தியர்கள் பதவி வகித்திருக்கின்றனர். அதன்படி, பி.டி.தாக்கூர்(1946-47), ஷபூர் பில்லிமோரியா (1949-50), நிதிஷ் லஹாரி (1953-54) காலகட்டங்களில் உலகளாவிய பதவியை வகித்த நிலையில் சுமார் 71 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில், அதுவும் திருச்சியில் இருந்து ஒருவர் ரோட்டரி இன்டர்நேஷனலின் துணைத்தலைவர் பதவியை பெற்றிருப்பது நாட்டுக்கும், திருச்சி மக்களுக்கும் கிடைத்த ஒரு பொக்கிஷம்.
 

 உலகளாவிய அமைப்பின் துணைத்தலைவர் பதவியை ஏற்ற எம்.முருகானந்தத்திற்கு திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகின்றது.
    பன்னாட்டு ரோட்டரி சங்கம் என்னும் பன்னாட்டு சுழற் சங்கம் (Rotary International) என்பது சமூக சேவையை நோக்கமாகக் கொண்ட ஒரு பன்னாட்டுச் சங்கமாகும். இது உலகில் நல்லெண்ணம், அமைதி ஆகியவற்றை உருவாக்க உதவும் பொருட்டு வணிகர் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு மதச்சார்பற்ற, நிறம், இனம், மதம், பால், அரசியல் சார்பற்ற அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு திறந்த அமைப்பு ஆகும். சேவை, நேர்மை, உலகப் புரிதல், நல்லெண்ணம் மற்றும் அமைதியை ஊக்குவித்தலே இந்த அமைப்பின் முக்கிய பங்காகும். உலகம் முழுவதும் 34.282 சங்கங்களும், 1.2 மில்லியன் உறுப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  முன்னதாக, சர்வதேச ரோட்டரி சங்கத் தலைவரான யின்கா பாபலோலா மற்றும் ரோட்டரி வாரிய உறுப்பினர்கள் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். உலக அரங்கில் 161-க்கும் மேலான நாடுகளில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் ரோட்டரி சங்கத்தின் துணைத்தலைவராக திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த எம்.முருகானந்தம் நியமிக்கப்பட்டிருப்பது போற்றுதலுக்குறியது.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0