பெண்களுக்கு மாதம் ரூ.2000: ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து- அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
பெண்களுக்கு மாதம் ரூ.2000: ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து- அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி
2026 ஆம் சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் மகளிருக்கு மாதம் ரூ.2000, ஆண்களுக்கு மாநகர பேருந்துகளில் இலவச பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 109 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக கட்சி அலுவலகத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கட்சி கொடியை ஏற்றி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதன்படி, மகளிர் நலன் குல விளக்கு திட்டம் அடிப்படையில் குடும்ப அட்டை தாரருக்கு ( பெண்கள் ) மாதம் 2000 ரூபாய் வழங்கப்படும், ஆண் மற்றும் பெண் இருவருக்கும் கட்டணமில்லா நகர பேருந்து திட்டம், அம்மா இல்ல திட்டம் மூலம் கிராம பகுதியில் சொந்த கான்கிரீட் வீடு, நகர பகுதி அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தரப்படும், 100 நாள் வேலை வாய்பபு 150 நாட்களாக உயர்த்தபடும், 5 லட்சம் பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0