சூரியூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்தில் முதல் போட்டி கோலாகலம் ; 800 காளைகள் 500 காளையர்கள் பங்கேற்பு
சூரியூர் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்தில் முதல் போட்டி கோலாகலம் ; 800 காளைகள் 500 காளையர்கள் பங்கேற்பு
தமிழகத்தில் பொங்கல் திருநாள் என்றால் ஜல்லிக்கட்டு வெகு விமர்சையாக நடப்பது வழக்கம். அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு இணையாக சூரியூர் ஜல்லிக்கட்டு பிரசித்தி பெற்றது.
பிரசித்தி பெற்ற சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்பட்டு முதல் போட்டியை இன்று ஆட்சியர் சரவணன் உறுதிமொழி வாசித்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி சூரியூர் கிராமத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நூற்றாண்டு காலமாக ஜல்லிக்கட்டு விழா நடைபெறும். அந்த வகையில் இந்த ஆண்டு புதிய ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு நேற்று துணை முதல்வரால் திறப்பு விழா நடந்தது.
இன்று காலை 8 மணி 2 நிமிடத்திற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் உறுதிமொழி வாசித்து பச்சைக் கொடி அசைத்து ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்தார். விழாவிற்கு டி ஆர் ஓ ஆர்டிஓ தவவளவன், திருவெறும்பூர் தாசில்தார் தனலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில் திருச்சி அரியலூர் பெரம்பலூர் புதுக்கோட்டை சிவகங்கை தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 800 மாடுகள் மற்றும் 500 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் உதவி இயக்குனர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் கலந்து கொள்வதற்கு தகுதி உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்து அனுப்பி வருகின்றனர்.
திருவெறும்பூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாலமுருகன் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்து அனுப்புவதோடு, ஜல்லிகட்டு போட்டியில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சையும் அளித்து வருகின்றனர்.
ஜல்லிகட்டு போட்டியில் மாடு பாய்ந்ததில் ஜல்லிகட்டு வீரர் 2 பேர் மாட்டின் உரிமையாளர் ஒருவரும் காயம் அடைந்தனர் இதில் ஜல்லிகட்டு வீரரான பெரிய சூரியூரை சேர்ந்த பூபாலன் (22) இடது மார்பில் பாய்தது அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜல்லிக்கட்டு மாட்டை அடக்கிய வீரரை ஜல்லிக்கட்டு காளையின் உரிமையின் உரிமையாளர் மற்றும் அவரின் ஆதாரவாளர்கள் தாக்க முற்பட்டதால் போலீசார் சிறிது தடியடி நடத்தி கும்பலை கலைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த ஜல்லிக்கட்டு விழாவில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் வந்திருந்து விழாவை பார்த்து ரசித்து உற்சாகமாக விசில் அடித்தும் கைத்தட்டியும் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர்.
விழாவில் அதிக காளைகளை அடக்கும் வீரருக்கு ரூ.5 லட்சம் மதிப்புள்ள கார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் அமைச்சர் நேரில் வழங்க உள்ளார். மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு இ ஸ்கூட்டர், பைக், சைக்கிள், ட்ரெஸ்ஸிங் டேபிள், தங்க காசு,ரொக்கம் ஆகியவையும் பரிசாக வழங்கப்படுகிறது.
விளையாட்டு விழாவிற்கான பாதுகாப்பு பணியில் திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனவாத் தலைமையிலான 600 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சூரியூர் ஜல்லிக்கட்டில் ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டியின் காளை மைதானத்தில் சிறிது நேரம் சுழன்று சுழன்று வீரர்களை பந்தாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
1
Funny
0
Angry
0
Sad
0
Wow
0