ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை

Dec 29, 2025 - 11:46
Dec 29, 2025 - 11:50
 0  15
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள்  மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி சேவை

ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் வைகுந்த ஏகாதசிப் பெரு​விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சொர்க்​க​வாசல் திறப்பு நாளை அதி​காலை ​ நடைபெற இருக்கும் நிலையில் பகல் பத்தின் இறுதி நாளான இன்று வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே காட்சி தரும் நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் நம் பெருமாள் எழுந்தருளினார்.

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்​க​நாதர் கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெரு​விழா கடந்த 19-ம் தேதி தொடங்​கியது. தொடர்ந்து பகல் பத்து உற்​சவம் நடை​பெற்று வரு​கிறது. விழா​வின் முக்​கிய நிகழ்ச்​சி​யான சொர்க்​க​வாசல் எனப்​படும் பரமப​த​வாசல் திறப்பு நாளை டிச.30 அதி​காலை நடை​பெற உள்​ளது.

 

பகல் பத்து உற்​சவத்​தின் கடைசி நாளான இன்று (டிச.29) காலை 6 மணிக்கு உற்​சவர் நம்​பெரு​மாள் மோகினி அலங்​காரத்​தில் (நாச்​சி​யார் திருக்​கோலம்) சௌரிக் சாயக் கொண்டை சாற்றி, அதில் கலிங்கத்துராய், சூர்ய - சந்திர வில்லை, சிகப்பு கல் நெற்றி பட்டை, முத்து பட்டையை பக்க வாட்டில் கொண்டையில் அணிந்து காதில் வைர மாட்டல் - தோடு - ஜிமிக்கி, வலது திருமூக்கில் மூக்குத்தி அணிந்து, திருமேனியில் பங்குனி உத்திர பதக்கம், தாயார் வைரத் திருமாங்ஙல்யம், தொங்கல் பதக்கம், வரிசையாக அடுக்கு பதக்கங்கள், பெரிய பவழ மாலை, காசு மாலை, 2 வட‌முத்து மாலை, வலது திருக்கையில் - தங்க கோலக்கிளி, இடது திருக்கையில் - வரிசையாக வில்வ பத்ரம், தாயத்து சரங்கள், வளையல், பவழ கடிப்பு , வில்வ பத்ர தொங்கல் சாற்றி, திருவடியில் - சதங்கை , தண்டை அணிந்து, பின் சேவையாக - பின்னல் ஜடை - அதன்மேல் ஜடை தாண்டா, திருமுடியில் கல் இழைத்த ராக்கொடி; ஜடைக்கு மேல் - நாகம் வைத்த கல் இழைத்த ஜடை தாண்டா, புஜ கீர்த்தி, கச்சு எடுத்து கட்டி - அதில் அரைச் சலங்கை தொங்க விட்டுக் கொண்டு, ரங்கூன் அட்டிகை, ஒட்டியாணம் அணிந்து, வெண் பட்டு உடுத்தி, வலது திருவடியை மடித்து அமர்ந்தும், இடது திருவடியை, திருக்கை தாங்க அமர்ந்து, மோகினி அலங்காரம் எனும் நாச்சியார் திருக்கோலத்தில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடாகி, ஆழ்வார்கள் பின் தொடர, அடியார்கள் புடை சூழ அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி அரையர் சேவை கண்டு பக்தர்களுக்கு சேவை சாதித்து வருகிறார்.

மாலை 5 மணிக்கு மேல் நான்​காம் பிர​காரம் வலம் வந்து கருட மண்​டபத்​தில் பக்​தர்​களுக்கு சேவை சாதிப்​பார்.

இரவு 7 மணிக்கு மேல் ஆழ்​வார், ஆச்​சார்​யர்​கள் மரி​யாதை​யான பின் 8.30 மணி​யள​வில் மூலஸ்​தானம் சேரு​வார். 

 ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று நாச்சியார் திருக்கோலம் எனும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளியதை முன்னிட்டு அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் திரண்டு வழிபட்டனர். பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்​பாடு​களை கோயில் இணை ஆணை​யர் சிவ​ராம்​கு​மார் தலை​மை​யில், பட்​டர்​கள், ஸ்தானீகர்​கள், கைங்​கர்​யபரர்​கள், அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் மற்​றும் உபய​தா​ரர்​கள் உள்​ளிட்​டோர் செய்​துள்​ளனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0