கர்நாடகாவில் பெரும் சோகம் : பஸ்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உடல் கருகி பலி
கர்நாடகாவில் பெரும் சோகம் : பஸ்-லாரி மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உடல் கருகி பலி
கர்நாடகா மாநிலம் சித்ரதுர்காவில் பஸ் ஒன்று, லாரி மீது மோதியதில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடகாவின் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கோர்லத்து கிராமம் அருகே தனியார் பஸ், லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ் தீப்பற்றி மளமளவென எரிய தொடங்கியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார், தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த விபத்தில், பஸ், லாரி இரண்டும் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. துரதிர்ஷ்டவசமாக பஸ்சுக்குள் சிக்கி இருந்த பலரால் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய சிலர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் 9 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. விபத்து அதிகாலை 3 மணியளவில் நிகழ்ந்து இருக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0