திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- ஆட்சியர்

Dec 24, 2025 - 09:59
Dec 24, 2025 - 09:59
 0  32
திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- ஆட்சியர்

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை- ஆட்சியர்  

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் ஜன.24 ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான கோயில் என்ற பெருமைக்குரியது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், பூலோக வைகுண்டம் எனவும், போக மண்டபம் எனவும் போற்றப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய இந்து கோவில் வளாகங்களில் ஒன்றாக திருச்சி அரங்கநாதர் திருக்கோயில் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு உற்சாகமாக நடைபெறும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் வரும் 30 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் அதிகாலை சொர்க்கவாசல் எனும் பரமபத வாசல் திறக்கப்படுகிறது. அன்று திருச்சியில் பல லட்சக்கணக்கானோர் திரண்டு ரங்கநாதரை வழிபடுவர்.

இதையொட்டி அன்று ஒரு நாள் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது இன மாவட்ட ஆட்சியர் சரவணன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0