பெரியார் பெருந்தொண்டர் சி.மருதை மறைவு: அரசு மருத்துவமனைக்கு உடல் தானம்

Dec 23, 2025 - 22:31
 0  2
பெரியார் பெருந்தொண்டர் சி.மருதை மறைவு: அரசு மருத்துவமனைக்கு உடல் தானம்

பெரியார் பெருந்தொண்டர் சி.மருதை மறைவு: அரசு மருத்துவமனைக்கு உடல் தானம் 

 

திருச்சி சுப்ரமணியபுரம், ஹைவேஸ் காலனியில் வசித்து வந்த சி.மருதை நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தீவிர பெரியார் பற்றாளரான இவர் திருச்சி திராவிடர் கழகத்தின் முன்னாள் மாநகர தலைவராக செயலாற்றினார்.

மேலும், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். 

இந்நிலையில் இன்று (23.12.2025) உடல் நலக் குறைவு காரணமாக மருதை இயற்கை எய்தினார். மறைந்த சி.மருதை உடலுக்கு திராவிடர் கழகத்தினர், தி.மு.க.வினர், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

  பின்னர் மாலை அவரது இல்லத்தில் இறுதி மரியாதை செலுத்திய பிறகு அவரது விருப்பத்தின் பேரில் அவரது உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்பட்டது.

முன்னதாக, மறைந்த சி.மருதைக்கு சுசிலா என்ற மனைவியும், மகன் அன்பழகன், மருமகள் மோனிஷா தேவி, மகள் சுமதி, மருமகன் ராஜேஷ், பேரப்பிள்ளைகள் இனியன், கவியாழினி, எழில்வேந்தன், மகிழினி ஆகியோர் உள்ளனர்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0