ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை; பதறும் பக்தர்கள்
ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை; பதறும் பக்தர்கள்
ஸ்ரீரங்கத்தில் இன்று வைகுண்ட ஏகாதேசி திருவிழா துவங்க இருக்கும் நிலையில், ஸ்ரீரங்கம் கொள்ளிடக்கறையில் பிரதான தங்கும் விடுதியான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான யாத்திரி நிவாஸில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இது குறித்த விபரம் வருமாறு
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலுக்குச் சொந்தமாக பஞ்சகரை பகுதியில் பக்தர்கள் தங்கும் விடுதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது .
வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து ஸ்ரீரங்கம் உள்ளிட்ட திருச்சியில் உள்ள பல்வேறு கோவிலுக்கு தரிசனம் செய்ய வருபவர்கள் இங்கு தங்கிச் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் உள்ள யாத்ரி நிவாஸில் கடந்த 10ம் தேதி ஒரு முதியவர் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வாடகைக்கு ஒரு அறையை எடுத்துள்ளார். ஒரு வாரத்திற்கும் மேலானதால் அந்த அறை காலி செய்யப்படாததால் பராமரிப்பாளர்கள் அந்த அறை அருகே சென்றுள்ளனர். அந்த அறைக்கு அருகே துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதிக்குச் சென்ற பணியாளர், யாத்ரி நிவாஸ் நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். உடன் அவர்கள் ஸ்ரீரங்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து இன்று சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கே 4 பேர் உடல் அழுகிய நிலையில் இறந்து கிடந்தனர். பின்னர் ஸ்ரீரங்கம் போலீசார் 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசாருக்கு அந்த அறையில் ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் திடுக் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் தெரிவித்ததாவது ; தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்த சாமிநாதன்(67), அவரது மனைவி செண்பகவல்லி(65) மற்றும் மகள்கள் பவானி(47), ஜீவா (32) ஆகியோர் கடந்த 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இந்த விடுதியில் தங்க முன்பதிவு செய்திருந்தனர்.14-ஆம் தேதி அன்று மேலும் இரண்டு நாட்கள் தங்க அனுமதி கேட்டு தங்கி உள்ளனர்.
இந்த சூழலில் 19 ஆம் தேதியான இன்று அவர்கள் அறையை காலி செய்யாததால் இது குறித்து கேட்க விடுதி பராமரிப்பாளர்கள் அந்த அறையின் அருகே சென்றபோது துர்நாற்றம் வீசி உள்ளது. அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் அடிப்படையில், அருகில் இருப்பவர்களை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரும் இறந்த நிலையில் கிடந்தனர்.
முதற்கட்ட விசாரணையில் பவானி(42), ஜீவா(37) இருவரும் மன வளர்ச்சி குன்றியவர்கள் என்பதும், மூத்த மகள் பவானி திருமணமாகி சில மாதங்களிலேயே விவாகரத்து ஆகி பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். அவர்கள் எழுதி இருந்த கடிதத்தில், தங்களுக்கு வயது மூப்பு ஆகிய நிலையில் தங்களுக்கு பின்னால் தங்கள் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்கிற விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி நான்கு பேரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது என ஸ்ரீரங்கம் போலீசார் தெரிவித்தனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் - 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் - 044-24640050].
முன்னதாக, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் இன்று வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் பகல் 10 ஆரம்பமாகும் நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான விருதியில் இப்படி ஒரு துர்மரணம் திருச்சி வாழ் மக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0