நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை ஒன்றியத்தில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்- அமைச்சர் அன்பில் மகேஷ்
நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை ஒன்றியத்தில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்- அமைச்சர் அன்பில் மகேஷ்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ரத்த தான முகாம் திமுக தெற்கு மாவட்ட அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சி.பி.ஐ) மாநில செயலாளர் வீரபாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்த தான முகாமினை தொடக்கி வைத்து, ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில்; உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜனநாயகம் இந்தியாவில் இருக்கிறது. அத்தகைய ஜனநாயகத்தின் குரலை பிரதமரும், உள்துறை அமைச்சரும் நெரிக்கிறார்கள். இந்த சூழலில் தமிழ்நாட்டு முதலமைச்சர் மேற்கொள்ளும் ஜனநாயகத்தை காக்கும் போரில் ஈடுபட்டுள்ளார். உரிமைகளுக்காகவும், நாட்டின் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாப்பதற்காகவும் தமிழ்நாடு போர் புரிந்து வருகிறது.
கூட்டணி பலத்தை கடந்து தமிழக மக்களின் கருத்தியல் ரீதியான ஒற்றுமை தான் திமுக வின் வெற்றிக்கு காரணம்.
நீதியரசர்கள் நிதானம் தவறிய போதும் கூட, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக முதல்வர் நிதானமாக செயல்பட்டார். எதிரிகள் பிளவுவாத கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதில் ஒன்றிய அரசுக்கும், பிரிவினைவாதிகளுக்கும் முதல்வர் தக்க பாடம் கற்பித்துள்ளார்.
பிரதமரும், உள்துறை அமைச்சரும், எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும், அவர்களை தோற்கடிக்கடிப்பதற்கு நாங்கள் தயாராக உள்ளோம்.
சனாதானத்தை உதயநிதி ஸ்டாலின் எதிர்ப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். அவர் கடவுள் வழிபாட்டையோ, ஆலய வழிபாட்டையோ எதிர்க்கவில்லை.
சனாதானத்தில் உள்ள ஜாதிய பாகுபாடு, பெண் அடிமைத்தனம் உள்ளிட்டவற்றை தான் எதிர்க்கிறார். இந்தியாவில் அதிகமான விழிபாட்டு ஆலயங்கள் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு. இங்குதான் மக்கள் அச்சமின்றி வழிபாடு செய்கிறார்கள். திருவிழாக்கள் நடைபெறுகிறது. சட்டம் அதற்கு உறுதுணையாக உள்ளது. அவற்றை நாங்கள் பாதுகாத்து வருகிறோம். ஆனால் எங்களோடு கொள்கை ரீதியாக மோத முடியாதவர்கள், தவறான பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள். இதனை தமிழக மக்கள் பிரித்தறிந்து எங்களுக்கு வெற்றியை தேடி தருவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில்; குருதிக்கொடை என்பது ரத்தம் கொடுப்பது மட்டுமல்ல. அது கொள்கை சார்ந்தது. ஆரியனின் ரத்தும் திராவிடனுக்கும், திராவிடனின் ரத்தம் ஆரியனுக்கும், இஸ்லாமியர்களின் ரத்தம் இந்துக்களுக்கும் தானம் செய்து எந்த பிரிவினையும் இல்லாமல் மனித உயிரை காப்பது தான் கொள்கை. நமக்குள் பிரிவினையை உருவாக்கும் வேலையை ஒன்றியத்தில் இருப்பவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள், அதனை நாம் முறியடிப்போம் என்றார்.
இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வன்னை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில், மாவட்டக் கழக நிர்வாகிகள் கோவிந்தராஜ், செங்குட்டுவன், மூக்கன், லீலாவேலு, குணசேகரன், பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேருர் கழக நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
க. சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0