பி.ஆர்.பாண்டியன்க்கு 13 ஆண்டுகள் சிறை: விடுதலை செய்ய வலியுறுத்தி டிசம்பர் 23ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்- விவசாய சங்கங்கள் முடிவு
பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜை விடுதலை செய்ய வலியுறுத்தி வரும் டிசம்பர் 23ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம்- விவசாய சங்கங்கள் முடிவு
ஓ.என்.ஜி.சி. நிறுவன சொத்துக்களை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோரை விடுவிக்க ஓஎன்ஜிசி மற்றும் நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், விக்கிரபாண்டியம் கிராமத்தில் 2015-ம் ஆண்டு ஓஎன்ஜிசி எதிராக போராடியதற்காக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பி.ஆர்.பாண்டியன் மேல்முறையிடு செய்துள்ளார்.
இந்நிலையில் அனைத்து விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்ய ஓஎன்ஜிசி மற்றும் நீதிமன்றம் மூலம் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி பெரியார் சிலை எதிரே கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மண்ணையும் மக்களையும் காக்க இரவு பகல் பாராது தொடர்ந்து குரல் கொடுத்துவரும் விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறை தண்டணை விவசாயகளுக்காக, விவசாய நிலங்களை காப்பதற்காக போராடியவர்களுக்கு தரபட்டுள்ள அதிக பட்ச தண்டனை. இதனை ரத்து செய்ய வலியுறுத்தி தொடரப்பட்டுள்ள மேல்முறையிட்டு வழக்கில் ஓஎன்ஜிசி மற்றும் நீதிமன்றம் மூலம் தமிழக அரசு விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேசினர்.
இதுகுறித்து மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் கூறுகையில்: மண்ணை காக்க போராடிய பி.ஆர்பாண்டியன் மற்றும் செல்வராஜ் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் தமிழகத்தில் உள்ள விவசாயிகளை ஒன்று திரட்டி வரும் டிசம்பர் 23 ம் தேதி சென்னையில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் எனவும், அதற்கு முன்னதாக வரும் 16ம் தேதி முதல் இதுகுறித்து எதிர்கட்சி தலைவர், தமிழக ஆளுநர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் விவசாயிகள் சந்திக்க விருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த ஆர்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் திருப்பதி வாண்டையார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், கோட்டூர் ஒன்றிய செயலாளர், தெய்வமணி, நகர செயலாளர் போஸ், நகர தலைவர் தங்கமணி, நகர பொருளாளர் முருகேசன், கோட்டூர் வடக்கு ஒன்றிய செயலாளர் இராவணன் உள்ளிட்ட விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0