லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிரடி வேட்டையில் திருச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது: கணக்கில் வராத லட்சக்கணக்கான ரொக்கம் பறிமுதல்
லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி வேட்டையில் திருச்சி மோட்டார் வாகன ஆய்வாளர் கைது: கணக்கில் வராத ஆயிரக்கணக்கான ரொக்கம் பறிமுதல்
திருச்சி மாவட்டத்தில் பிராட்டியூர், ஸ்ரீரங்கம், திருவெறும்பூர் மற்றும் ஓயாமரி இடுகாடு அருகே கிழக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் என நான்கு இடங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.
இதில் திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து துறை அலுவலகத்தில் ஓட்டுநர் பழகுநர் உரிமம் பெற ரூ.1,000 லஞ்சம் வாங்கியதாக திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலக போக்குவரத்து வாகன ஆய்வாளர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த உதவியாளரும் கைது செய்யப்பட்டார். இவர்களிடம் இருந்து மேலும் 13 ஆயிரம் ரூபாயை கைப்பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்த விபரம் வருமாறு ;
திருச்சி மாவட்டம் குண்டூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவர் ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார் பழனியப்பன் இரண்டு பேருக்கு ஓட்டுனர் பழகுநர் உரிமம்(எல்.எல்.ஆர்) பெறுவதற்காக திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார். அங்கு மோட்டார் வாகன ஆய்வாளர் மணிபாரதி என்பவரிடம் ஓட்டுனர் பழகுநர் உரிமம் பெறுவதற்கான விண்ணப்பங்களை அளித்துள்ளார். அப்போது போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிபாரதி பழகுநர் ஒட்டுநர் உரிமம் (எல்.எல்.ஆர்)எடுக்க ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில், லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர்கள் பிரசன்ன வெங்கடேஷ், சக்திவேல், பாலமுருகன் உள்ளிட்ட லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் இன்று அதிரடியாக பிராட்டியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்குச் சென்று பொறிவைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பழனியப்பனிடம் இருந்து போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணிபாரதி ஆயிரம் ரூபாய் லஞ்ச பணத்தை அவரது உதவியாளர் திலீப்குமார் மூலம் வாங்கியபோது கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் மணிபாரதியின் உதவியாளர் திலீப்குமார் என்பவரிடமிருந்து 13,000 பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதுடன் இது தொடர்பாக போக்குவரத்து வாகன ஆய்வாளர் மணி பாரதியை தீவிரமாக டிஎஸ்பி மணிகண்டன் விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின் அடிப்படையில் அவரது இல்லத்தை சோதனையிட்ட போது கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இவற்றை கைப்பற்றி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து மேலும் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார். திருச்சி மாவட்ட போக்குவரத்து வட்டார அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறையினரின் ரெய்டு சக ஆர் டி ஓ அலுவலக ஊழியர்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
2
Dislike
0
Love
0
Funny
1
Angry
0
Sad
0
Wow
0