உதயநிதி பிறந்தநாள்: 48 சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Dec 11, 2025 - 19:54
Dec 11, 2025 - 19:56
 0  22
உதயநிதி பிறந்தநாள்: 48 சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்

உதயநிதி பிறந்தநாள்: 48 சாதனையாளர்களுக்கு விருது வழங்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் 

உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக திருச்சி தெற்கு மாவட்ட மற்றும் மாநகர வர்த்தக அணி சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா திருச்சி பால்பண்ணை அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் செந்தமிழ் செல்வன் மற்றும் மாநகர அமைப்பாளர் கே பி கே சரவணன் ஆகியோர் தலைமை வகித்தனர். விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் மாவட்ட வர்த்தக அணி தலைவர் பாலாஜி வரவேற்றார்.

மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு சாதனையாளர்களை கௌரவித்து அவர்களுக்கு விருது வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

இந்த விருது வழங்கும் விழாவில் மாநகர செயலாளர் மண்டல குழு தலைவர் மு.மதிவாணன், மாவட்ட துணைச் செயலாளர் செங்குட்டுவன் மற்றும் வர்த்தக அணி, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்புரையாற்றியபோது தெரிவித்ததாவது;

திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் தமிழக துணை முதல்வர் அவர்களின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டத்தின் சார்பில் 48 நிகழ்ச்சிகள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டு 24 வது நிகழ்வாக நமது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 48 சாதனையாளர்களுக்கு திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகின்றது. மேலும், இவர்களைப் பார்த்து மற்றவர்கள் இளைய சமுதாயத்தினர் சாதனை புரிய வேண்டும் என்பதற்காக இந்த விருந்து வழங்கப்படுகிறது. உழைப்பால் உயர்ந்தவர்கள் நீங்கள் அனைவரும் என்றும் உங்களால் இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலேயே இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு தான் முதலிடத்தில் உள்ளது. மேலும் நமது மாநிலம் முதலிடம் ஆக வருவதற்கு காரணம் தமிழக முதல்வர் தான். நமது தமிழக முதல்வரின் இலக்கு பொருளாதாரத்தில் 2030 ல் ஒரு ட்ரில்லியன் அகாடமியை தொட வேண்டும் என்ற இலக்கை சாதித்துக் காட்ட வேண்டியவர்கள் நீங்கள்தான். மேலும், தற்பொழுது மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் அவர்கள் 36 ஆயிரத்து 660 கோடி ரூபாய் முதலீட்டை கொண்டு வந்துள்ளார். இதனால் 34 லட்சம் இளைஞர்கள் வேலைவய்ப்பு வழங்க வழிவகை செய்து வந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதில் முதலிடம் தமிழ்நாடு தான் என்று ரிசர்வ் வங்கியே கூறியுள்ளது. எனவே, நாம் அனைவரும் முதல்வரின் கரத்தை வலுப்படுத்தி, இந்தியாவிலேயே தமிழநாட்டின் பொருளாதாரத்தை முதலிடமாக கொண்டு வருவதற்கு பாடுபட வேண்டும். 

மேலும், இன்றைய பிறந்தநாள் விழா நிகழ்ச்சி காணும் தமிழக துணை முதல்வர் பல்லாண்டு வாழ நாம் அனைவரும் வாழ்த்துவோம் என பேசினார்.

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0