மேகதாட்டு அணை ஆணையத்தில் இனி விவாதிக்க இடமில்லை, காவிரி ஆணைய தலைவர் எஸ்கே ஹல்தார் திட்டவட்டம்-பி ஆர் பாண்டியன் தகவல் -
மேகதாட்டு அணை ஆணையத்தில் இனி விவாதிக்க இடமில்லை காவிரி ஆணைய தலைவர் எஸ்கே ஹல்தார் திட்டவட்டம்-பி ஆர் பாண்டியன் தகவல் -
காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ் கே ஹல்தார் மேட்டூர் அணையை பார்வையிட்டு விட்டு இன்று கல்லணைக்கு வருகை தந்தார். அவரை நேரில் சந்தித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனுவை அளித்து மேதாட்டு அணை பாதிப்பு குறித்து விரிவாக எடுத்துரைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பி ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது;
காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு சட்ட விரோதமாக மேகதாட்டு அணை கட்டுவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இது காவிரி நடுவர் மண்ற இறுதி தீர்ப்புக்கு முரணானது மட்டுமின்றி,உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் முடக்கும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்படுகிறது. இது குறித்து ஆணையம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வரைவு திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.ராசி மணலில் அணை கட்டி உபரிநீர் கடலுக்கு செல்வதை தடுத்து மேட்டூர் அணை மூலமாக பாசனத்திற்கு பயன்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்களை வலியுறுத்தினேன்.
அதற்கு பதிலளித்த ஹல்தார், மேகதாட்டு அணை ஏற்கனவே ஆணையத்தில் விவாதிக்க மறுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இனி அது குறித்து விவாதிப்பதற்கு ஆணையத்தில் இடமில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் நீர்வள ஆணையத்திற்கு தான் வழிகாட்டி உள்ளது. எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவு குறித்து தகவல் இல்லை என்றார்.
இந்நிலையில் கர்நாடகாவில் மேகதாட்டு அனை கட்டப்பட உள்ள இடம் அடர்ந்த வனப்பகுதி மட்டுமல்ல, புலிகள் சரணாலயம் உள்ளிட்ட விலங்குகள் சரணாலயம் உள்ள பகுதியாகும். எனவே, மத்திய அரசு வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் அணை கட்டுமானம் குறித்து விவாதிக்க முடியாது என தெளிவாக எடுத்துரைத்தார்.
தமிழகம் ஆணையத்தில் ராசிமணல் அணை குறித்து தீர்மானம் கொண்டு வருமேயானால் அது குறித்து விரிவான விவாதத்திற்கு உட்படுத்தப்படும் என்றார்.
எனவே, தமிழக அரசு ராசி மணல் அணை கட்டுமானம் குறித்து ஆணைய கூட்டத்தில் தீர்மானம் முன்மொழிய வேண்டும் என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, நீர் பாசனத்துறை தலைமை பொறியாளர் சிவக்குமார், கண்காணிப்பு பொறியாளர் திலீபன், செயற்பெறியாளர்கள் இளங்கோவன், ஆனந்தன் உள்ளிட்ட பொறியாளர்கள் மற்றும் தஞ்சை மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், மாநில இளைஞரணி செயலாளர் ஆர்.மகேஸ்வரன், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் ஆ.பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0