ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாடடம்
ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திக சார்பில் ஆர்ப்பாடடம்
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அவதூறு பேசி வரும் ஆர்.எஸ். எஸ். ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து திருச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஜங்சன் காதிகிராப்ட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பி.மலர்மன்னன் தலைமை வகித்தார். திக மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ்,, மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக்கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை. புலிகேசி ஆர்ப்பாட்டத்தை விளக்கி கண்டன யுரையாற்றினார். அவர் பேசுகையில் பீகாரை போன்று வன்முறை மாநிலமாக மாற்றி விடலாம் என ஆர் எஸ் எஸ் ரவி திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் அவருடைய எண்ணம் தமிழ்நாட்டில் ஈடேறாது இது பெரியார் மண் இங்கு நடப்பது திராவிட மாடல் அரசு என பேசினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் திக தோழர்கள், பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர், நிறைவாக மாவட்ட செயலாளர் மகாமணி நன்றி கூறினார்
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0