தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா; மீண்டும் தங்கம் வென்று சாதனை

Dec 3, 2025 - 11:10
 0  26
தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா; மீண்டும் தங்கம் வென்று சாதனை

தேசிய அரங்கில் தமிழ்நாட்டை பிரகாசப்படுத்திய திருச்சி மாணவி லக்ஷனா; மீண்டும் தங்கம் வென்று சாதனை

   டெல்லி  தல்கோத்ரா(TALKOTARA) உள் விளையாட்டு அரங்கில் 01.12.2025 நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டி என்ன நடைபெற்றது. இந்த போட்டியில் நாட்டின் பல மாநிலங்களைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர் .

  இந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்களில் திருச்சி மாணவி பி.லக்ஷனா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

 இந்த கராத்தே போட்டியில் சிறியவர் 11 வயது, 45 கிலோ. எடை பிரிவு (குமித்தே) என்ற பிரிவில் பங்கேற்ற லக்ஷனா, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த திறமையான போட்டியாளர்களை ஒவ்வொன்றாக வீழ்த்தி, இறுதியில் இந்திய அளவிலான தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

 விளையாட்டரங்கில் இருந்த பார்வையாளர்கள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் அனைவரும் லக்ஷனாவின் தரமான கிக்குகள், வேகமான நடைகள், கட்டுப்பாட்டான தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கண்டு வியந்து பாராட்டினர். 

  லக்ஷனா சிறுவயது முதலே திருச்சி பிரகாஷ் நகரில் உள்ள தமிழ் வாரியர் கராத்தே அகாடமியில்மா ஸ்டர் கராத்தே சுதாகர் என்பவரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

 இந்த சாதனைக்கு வித்திட்ட சுதாகர் மாஸ்டர் தெரிவிக்கையில்; லக்ஷனா ஒரு சாதாரண மாணவி அல்ல.“ரிங்கில் அடியெடுத்து வைத்தாலே போர்வீரனாக மாறும் குழந்தை”, ஒவ்வொரு நாளும் பயிற்சிக்கான கட்டுப்பாடு, போராட்ட உணர்வு, மன உறுதி இவைதான் லக்ஷனாவின் வெற்றிக்கு அடிப்படை. போட்டிப் பயிற்சி எப்போதும் எளிதானது அல்ல, ஆனாலும், லக்ஷனா தன்னுடைய வயதை மறக்கும்படி, தொழில்முறை வீராங்கனையைப் போலவே உழைத்திருக்கிறார். இந்த வெற்றி, திருச்சிக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டுக்கும் ஒரு பெருமை.அரங்கில் வெற்றியை உறுதி செய்து தங்கம் பெற்ற அந்த தருணத்தில்,“ இது தான் நம் தமிழகப் பெண் குழந்தைகளின் வல்லமை” என்று பலரும் பெருமையாக கூறியிருக்கிறார்கள்.

லக்ஷனாவின் பெயர் இன்று பள்ளிகளிலும், பயிற்சி மையங்களிலும், சமூக ஊடகங்களிலும் ஊக்க மூட்டும் கதையாக பேசப்படுகிறது. பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் எனத் தூண்டப்படுகிறார்கள். லக்ஷனாவின் பயணம் துவக்கமே, இன்னும் மேல்நிலை போட்டிகள், இன்னும் பெரிய மேடைகள், அதற்கு அப்புறம் சர்வதேச அரங்குகள் அனைத்திலும் லக்ஷனா தன் திறமையை காட்ட தயாராக இருக்கின்றார். இந்த வெற்றி, அவர் வாழ்க்கையின் ஒரு மைல் கல் மட்டுமே, அவரை ஆர்ப்பரித்து வரவேற்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வீராங்கனை லக்ஷனா: கடந்த ஏழு வருடங்களாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். டெல்லியில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் என்று உள்ளேன் இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து சுமார் 2000 வீராங்கனைகள் பங்கேற்றனர். என்னுடைய பிரிவில் சுமார் 360 வீரர்கள் பங்கேற்றதில் நான் தங்கம் வென்று உள்ளேன்.அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில்  பங்கேற்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெயர் வாங்கி கொடுக்க வேண்டும் என்பது என் விருப்பம். தினம் காலையில் சிறிது நேரமும், மாலை முழு நேரமுமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். தமிழக அரசு எனக்கு தொடர்ந்து ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்து வருகிறது என தெரிவித்தார்.

 முன்னதாக, நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த தங்க மங்கைக்கு அமைச்சர் ரகுபதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். 

க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 1