டித்வா புயல்: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி

Nov 30, 2025 - 13:49
 0  1
டித்வா புயல்: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி

டித்வா புயல்: கும்பகோணம் அருகே சுவர் இடிந்து இளம்பெண் பலி


   டித்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழை காரணமாக கும்பகோணம் அருகே வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இதுகுறித்த விபரம் வருமாறு;
   கும்பகோணம், ஆலமன்குறிச்சி உடையார் தெருவைச் சேர்ந்தவர் முத்துவேல். இவரது மனைவி கீதா. இந்த தம்பதியினருக்கு கனிமொழி மற்றும் ரேணுகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
   டித்வா புயல் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நேற்று (நவ.29) இரவு முத்துவேலின் வீட்டுச் சுவர் திடிரென இடிந்து விழுந்தது. இதில் வீட்டிலிருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர்.
    இதையறிந்த அருகில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பலத்த காயமடைந்த 2 மகள்களை தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர். இதில் 2-வது மகள் ரேணுகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக சுவாமிமலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
  இந்த அசம்பாவிதம் குறித்து கேள்விப்பட்ட சாக்கோட்டை சு.அன்பழகன் எம்.எல்.ஏ., கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வரும் தம்பதியினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
க.சண்முகவடிவேல்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0