ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று; ரயில்கள் அனைத்தும் மண்டபத்தோடு நிறுத்தம்; ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

Nov 28, 2025 - 09:38
 0  14
ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று; ரயில்கள் அனைத்தும் மண்டபத்தோடு நிறுத்தம்; ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ராமேஸ்வரத்தில் சூறைக்காற்று; ரயில்கள் அனைத்தும் மண்டபத்தோடு நிறுத்தம்; ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

  வங்கக்கடலில் உருவாகியுள்ள டித்வா புயலால் தமிழ்நாட்டுக்கு மழைக்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. அதிலும் தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் பாம்பன் பாலம் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் செல்லும் அனைத்து ரயில்களும் மண்டபத்துடன் நிறுத்தப்பட்டது.

தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வட மாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டித்வா புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்று மணிக்கு 50 கி.மீ வேகத்தில் வீசுவதால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய ரயில்கள் மண்டபம் பகுதியில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. ராமேஸ்வரம் மீனவர்கள் 5-வது நாளாக இன்றும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. ராமேஸ்வரம் பகுதியில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்றும், நாளையும் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை மறுநாள் வரை மணிக்கு 50 முதல் 80 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0