கரூரில் சி.பி.ஐ அதிகாரிகள் முன்பு ஆஜரான தவெக நிர்வாகிகள் புஸ்லி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா
கரூரில் சி.பி.ஐ அதிகாரிகள் முன்பு ஆஜரான தவெக நிர்வாகிகள் புஸ்லி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 நபர்கள் பலியான வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின் கீழ் கடந்த அக்டோபர் 16-ம் தேதி முதல் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கரூர் சுற்றுலா மாளிகையில் தற்காலிக முகாமை அமைத்து, சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
அக். 31-ம் தேதி மற்றும் நவ 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் 3டி லேசர் ஸ்கேனர் மூலம் வேலுசாமிபுரத்தில் சாலையை சிபிஐயினர் அளவீடு செய்தனர். நவ. 4, 5-ம் தேதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட போலீஸார், நவ. 6-ம் தேதி முதல் நவ. 11-ம் தேதி வரை ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்களிடம் 6 நாட்கள் விசாரணை நடத்தினர்.
நவ. 8 மற்றும் 9 ஆகிய இரு நாட்கள் தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி காமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விபரங்கள் அடங்கிய ஆவணங்களை, சிபிஐயை கேட்ட அனைத்து ஆவணங்களை ஒப்படைத்து 2 நாட்களாக விளக்கம் அளித்தனர்.
நவ. 10 மற்றும் 17-ம் தேதிகளில் தமிழ்நாடு பவர் கிரிட் கார்ப்பரேஷன் அதிகாரிகள், நவ. 11-ம் தேதி முதல் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களிடம் நவ. 14-ம் தேதி வரை 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது.
நவ. 15-ம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தும் கரூர் வெங்கமேடு விவிஜி நகரை சேர்ந்த கூட்ட நெரிசலில் காயமடைந்த தாய், மகளான உஷா மற்றும் திவ்யா ஆகியோரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
கடந்த 4 நாட்களாக விசாரணைக்கு யாரும் ஆஜராகாத நிலையில் இன்று (நவ. 24-ம் தேதி) காலை சுமார் 10 மணியளவில் கரூர் சுற்றுலா மாளிகைக்கு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை செயலாளர் சிடி நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், பவுன்ராஜ், வழக்கறிஞர் அரசு ஆகியோர் 3 கார்களில் ஆஜராகினர்.
கூட்டத்திற்கு செய்யப்பட்ட ஏற்பாடு, பிரச்சார வாகன வருகையின் போது ஏற்பட்ட நெரிசல், உயிரிழப்பு சம்பவம் உள்ளிட்ட விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் வருகை காரணமாக தவெக நிர்வாகிகள், மகளிரணியினர் கரூர் சுற்றுலா மாளிகைக்கு வெளியே திரண்டதால் மீண்டும் கரூரில் பரபரப்பு நிலவுகிறது.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0