தற்குறிகள் ஒன்றாக சேர்ந்து தான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள் - காஞ்சியில் விஜய்
தற்குறிகள் ஒன்றாக சேர்ந்து தான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள் - காஞ்சியில் விஜய்
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று காலை மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். கரூரில் கடந்த செப்டம்பர் மாதம் பிரச்சார பயணத்தின் போது 41 நபர்கள் பலியான சம்பவத்திற்கு பிறகு ஒரு நீண்ட இடைவெளி விட்டு, மீண்டும் விஜய் இன்று பொதுமக்களை சந்தித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விஜய் பேசுகையில், ' அது என்னப்பா அது தற்குறியா..? தமிழக வெற்றிக்கழகத்துக்கு ஆதரவு கொடுக்கின்ற லட்சக்கணக்கான மக்கள் எல்லோரையும் தற்குறிகள் எனக் கூறிவிட்டு, இப்போ அவர்களை தற்குறி என்று அழைக்காதீர்கள் அவர்கள் அப்படி இல்லை.. சங்கிகள் என்று கூப்பிடாதீர்கள் அவங்க அப்படி இல்லை என்று சொல்லி திமுக கூட்டத்தில் தவெகவுக்கு ஆதரவாக ஒரு குரல். அந்த குரல் யாரோடதுன்னு பார்த்தா.. இப்ப சமீபத்தில் நடத்துனாங்களே அறிவுத்திருவிழா.. மன்னிச்சிடுங்க அவதூறு திருவிழா... என பன்ச் அடித்தார். அந்த கட்சியின் தலைமையே குழப்ப வைத்த எம்.எல்.ஏவின் குரல். அவர் நம் கொள்கைத் தலைவர்களின் ஒருவரான அஞ்சலையம்மாளின் உறவினராம். இனி இந்தக்குரல் ஒவ்வொரு வீட்டில் எதிரொலிக்கும் சும்மா சரவெடிதான்.
இது ஒன்னும் இன்று நேற்று நடக்கவில்லை. 1972-ல் நடந்து முடிந்துவிட்டது. எப்போ எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பித்தாரோ அப்பவே அது ஒரு கூத்தாடி கட்சி, அவர் பின்னால் திரண்டு நின்றவர்களை கூத்தாடி கும்பல், நடிகர் கட்சி என்று விமர்சித்துவிட்டு அந்தகட்சியிலே போய் ஒருத்தர் சேர்ந்துவிட்டார். ஒட்டு மொத்த தமிழக மக்களும் எம்.ஜி.ஆர் உடன் தானே போய் சென்று சேர்ந்தார்கள். இது வரலாறு. இந்த வரலாறு நம்மை விட அவர்களுக்கு நன்றாக தெரியும்.
எம்.ஜி.ஆர் நடித்த மர்மயோகி என்ற படத்தில் அவரது கதாப்பாத்திரத்தின் பெயர் கரிகாசன். அவர் ஒரு சூப்பர் வசனம் பேசுவார். " குறி வைத்தால் தவற மாட்டேன். தவறுமானால் குறியே வைக்க மாட்டேன்" என்பார். இது எல்லாம் யாருக்கு சொல்றோம்னு புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.. ஏண்டா இந்த விஜய்யை தொட்டோம்.. ஏன் அந்த மக்களை தொட்டோம் என நினைக்கப்போறீங்க என விஜய் பேச பேச கரவொலியில் அரங்கமே அதிர்ந்தது.
தொடர்ந்து பேசியவர், மக்களின் பிரச்னைகளைப் பேசும்போது தற்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு தவெக மீது ஒரு ஆத்திரம் வரத்தானே செய்யும். அனைத்து மேடைகளிலும் தவெக பற்றி அவதூறு பேசுகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்வோம்.
கரூர் பற்றி நான் பேசுவேன் என்று எதிர்பார்க்கிறார்கள். நான் கண்டிப்பாக பேசுவேன்.
தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சியை மக்கள் வரவைப்பார்கள். 2026ல் தவெக ஆட்சி அமையும். தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகள் விரிவாக இடம்பெறும். அதில் சிலவற்றை இங்கு சொல்ல விரும்புகிறேன்.
எல்லாருக்கும் நிரந்தரமான வீடு இருக்க வேண்டும். வீட்டிற்கு ஒரு இருசக்கர வாகனம் கண்டிப்பாக இருக்க வேண்டும். காரும் அவசியம் அதற்கான முன்னேற்றத்திற்கு வழி வகுப்போம். பொருளாதார வளர்ச்சிக்கு வழியை ஏற்படுத்த வேண்டும்.
வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு டிகிரியாவது படித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு வருமானம் இருக்க வேண்டும். அதற்கான வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்.
கல்வியில் பாடத்திட்ட சீர்திருத்தம் செய்ய வேண்டும். அரசு மருத்துவமனைகளுக்கு மக்கள் பயமின்றிச் செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை செய்வோம்.
பருவ மழைக் காலங்களில் மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்.
மீனவர்கள், நெசவாளர்கள், அரசு ஊழியர்களின் ஆலோசனையுடன் ஒரு வளர்ச்சி திட்டம். தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கு கடுமையான விதிகளுடன் சரியாக இருக்க வேண்டும். இவற்றை எல்லாம் எப்படி செயல்படுத்துவோம் என்றும் தேர்தல் அறிக்கையில் கூறுவோம்.
நான் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நல்லது செய்ய மட்டுமே. சொன்னால் அதைச் செய்யாமல் விடமாட்டேன். குறி வைக்க மாட்டேன், குறிவைத்தால் தவற விடமாட்டேன்.
அதென்ன தற்குறி... தவெகவை ஆதரிக்கும் லட்சக்கணக்கான நண்பா, நண்பிகள், ஜென் ஸி கிட்ஸ்களை தற்குறி என சொல்லிவிட்டு, இப்போது அப்படி சொல்லவேண்டாம் என்கிறார்கள். தற்போது நடத்திய அறிவுத்திருவிழாவில் பேசிய ஒரு எம்எல்ஏ தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார். அவர் நம் கொள்கை தலைவர் அஞ்சலை அம்மாளின் சொந்தக்காரர். இந்த ஆதரவு இனி எல்லா வீட்டிலும் எதிரொலிக்கும்.
மேலும், மக்களிடமிருந்து ஓட்டு வாங்கப்போகும் நாங்கள் தற்குறிகள் என்றால், மக்களிடமிருந்து ஏற்கெனவே ஓட்டு வாங்கிய நீங்கள் யார்? மக்கள் எல்லோரும் உங்களுக்கு தற்குறிகளா? இந்த தற்குறிகள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்துதான், விடையே தெரியாத அளவுக்கு உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்க போகிறார்கள். இவர்கள் தற்குறிகள் கிடையாது. இவர்கள் தமிழக அரசியலின் ஆச்சர்ய குறி, மாற்றத்துக்கான அறிகுறி. இங்கே தவெகவுக்கும், திமுகவுக்கும்தான் போட்டி. மை டியர் அங்கிள், சார்.
மீண்டும் சொல்கிறேன் வரும் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் தான் போட்டி. வெற்றி நிச்சயம்" என்று பேசினார்.
க.சண்முகவடிவேல்
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0